ஆசிய ஜூனியர் ஹாக்கி: மலேசியாவை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி

ஆசிய ஜூனியர் ஹாக்கி: மலேசியாவை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி
Updated on
1 min read

மோகி: சீனா​வின் மோகி நகரில் ஆசிய ஜூனியர் கோப்பை ஹாக்​கிப் ​போட்​டிகள் நடை​பெற்று வரு​கின்​றன. இந்​நிலை​யில் நேற்று நடை​பெற்ற லீக் போட்​டி​யில் இந்​திய மகளிர் அணி 11-1 என்ற கோல் கணக்​கில் மலேசிய அணி​யைத் தோற்​கடித்​தது.

இந்​திய அணி​யின் சார்​பில் மானே சானிகா சந்​திர​காந்த், யாதவ் கீதா, சாஹு பூஜா, யாதவ் பூர்​ணிமா ஆகி​யோர் தலா 2 கோல்​களும், சர்மா கிருஷ்ணா, தன் பினி​மா, கவுர் சுக்​வீர் ஆகி​யோர் தலா ஒரு கோலும் அடித்​தனர்.

ஆடவர் பிரி​வில் டிரா ஆடவர் பிரிவு ஏ பிரி​வில் நேற்று நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் இந்​தி​யா 3-3 என்ற கோல் கணக்​கில் , ஜப்​பானுடன் டிரா செய்தது.

இந்​தி​யா​வின் சார்​பில் கேப்​டன் அன்​மோல் எக்கா 2 கோல்​களும் (4, 60-வது நிமிடங்​கள்), ஆஷு மவுர்யா (10-வது நிமிடம்) ஒரு கோலும் அடித்​தனர். ஜப்​பான் தரப்​பில் ரியுஷின் செசாகி (11-வது நிமிடம்) ஒரு கோலும், கஸுகி நகானிஷி (48, 59-வது நிமிடங்​கள்) 2 கோல்​களும்​ அடித்​தனர்​.

ஆசிய ஜூனியர் ஹாக்கி: மலேசியாவை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி
கவுண்டி கிரிக்கெட்: சாய் கிஷோர் அசத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in