ஆசிய விளையாட்டு போட்டி: உத்தேச இந்திய கிரிக்கெட் அணியில் வைபவ் சூர்யவன்ஷி

வைபவ் சூர்யவன்ஷி

வைபவ் சூர்யவன்ஷி

Updated on
1 min read

புதுடெல்லி: ஆசிய விளையாட்டு போட்டி வரும் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை ஜப்பானில் உள்ள ஐச்சி-நகோயா நகரில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் கிரிக்கெட் போட்டியில் இந்தியா பங்கேற்கிறது.

இந்நிலையில் இந்த தொடருக்கான 30 பேர் கொண்ட உத்தேச பட்டியலை பிசிசிஐ, இந்திய ஒலிம்பிக் சங்கத்திடம் வழங்கி உள்ளது.

இதில் தற்போதைய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி அணியின் கேப்டன் ஷுப்மன் கில் ஆகியோர் இடம் பெறவில்லை. மாறாக 15 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷி உள்ளிட்ட இளம் வீரர்கள் பலர் இடம் பெற்றுள்ளனர்.

உத்தேச இந்திய அணி விவரம்:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், திலக் வர்மா, ஜஸ்பிரீத் பும்ரா, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், நித்திஷ் குமார் ரெட்டி, பிரசித் கிருஷ்ணா, வருண் சக்ரவர்த்தி, அனுகுல் ராய், ஆயுஷ் பதோனி, ஹர்ஷ் துபே, துருவ் ஜூரெல், கலீல் அகமது, ருதுராஜ் கெய்க்வாட், ரவி பிஷ்னோய், ஷாபாஷ் அகமது, ஷிவம் துபே, விப்ராஜ் நிகாம், ஹர்ஷித் ராணா, யாஷ் தாக்குர், வாஷிங்டன் சுந்தர்.

<div class="paragraphs"><p>வைபவ் சூர்யவன்ஷி</p></div>
4 தேர்வுகளின் குளறுபடியால் ஒரு கோடி பேர் பாதிப்பு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in