Asian Games 2026: பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்றது இந்திய கிரிக்கெட் அணி!

Asian Games 2026: பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்றது இந்திய கிரிக்கெட் அணி!
Updated on: 
1 min read

நிஷின் (ஜப்பான்): ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று நடைபெற்ற ஆடவர் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில், பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா தங்கப் பதக்கம் வென்றது. இதன்மூலம் 2023 சீனாவின் ஹாங்சோ ஆசிய விளையாட்டு போட்டிகளில் வென்ற தங்கத்தை இந்தியா தக்கவைத்துக் கொண்டது.

20-வது ஆசிய விளை​யாட்டு போட்டி ஜப்​பானின் ஐச்​சி - நகோயா மாகாணத்​தில் நடை​பெற்று வரு​கிறது. இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக அபிஷேக் ஷர்மா 61 ரன்கள் மற்றும் திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 51 ரன்கள் எடுத்தனர். இதன் காரணமாக இந்திய அணி 20 ஓவர்களில் 211 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை எட்டியது.

212 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடியை அளித்தனர். ஆனாலும், பாகிஸ்தான் அணியின் ஹசன் நவாஸ் சிறப்பாக விளையாடி 96 ரன்கள் குவித்தார். அவர் இறுதிவரை போராடியும் இந்திய அணியின் பந்துவீச்சு, பாகிஸ்தானை சுருட்டியது.

இந்தியா சார்பில் அக்சர் படேல், ஷிவம் துபே மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

இந்த வெற்றியின் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

Asian Games 2026: பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்றது இந்திய கிரிக்கெட் அணி!
“தவெக வேட்பாளரை உருவக்கேலி செய்வதா?” - ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in