வெண்கலம் வென்ற சீமா குமாரி முதல் ‘பதக்கப் பட்டியல்’ வரை | ஆசிய விளையாட்டு போட்டி ஹைலைட்ஸ்

வெண்கலம் வென்ற சீமா குமாரி முதல் ‘பதக்கப் பட்டியல்’ வரை | ஆசிய விளையாட்டு போட்டி ஹைலைட்ஸ்
Updated on: 
3 min read

10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம் வென்றார் சீமா குமாரி

ஆசிய விளையாட்டு போட்டி​யில் மிக​வும் எதிர்​பார்க்​கப்​பட்ட தடகள போட்​டிகள் நேற்று நடை​பெற்​றன. இதில் மகளிருக்​கான 10 ஆயிரம் மீட்​டர் ஓட்ட பந்​த​யத்​தில் இந்​தி​யா​வின் சீமா குமாரி பந்தய தூரத்தை 32:50.05 விநாடிகளில் கடந்து 3-வது இடம் பிடித்து வெண்​கலப் பதக்​கம் வென்​றார்.

பக்​ரைனின் யாவி வின்ஃபிரெட் (32:39.18) முதலிடம் பிடித்து தங்​கப் பதக்​க​மும், ஜப்​பானின் தனகா நோஸோமி (32:41.54) 2-வது இடம் பிடித்து வெள்​ளிப் பதக்​க​மும் வென்​றனர். ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் மகளிருக்​கான 10 ஆயிரம் மீட்​டர் ஓட்​டத்​தில் 16 வருடங்​களுக்கு பிறகு தற்​போது​தான் இந்​தியா பதக்​கம் வென்​றுள்​ளது. கடைசி​யாக 2010-ம் ஆண்டு ஆசிய விளை​யாட்டு போட்​டி​யில் இந்​தி​யா​வின் ப்ரீஜா ஸ்ரீதரன் தங்​கப் பதக்​க​மும், கவிதா ரவுத் வெள்​ளிப்​ பதக்​க​மும்​ வென்​றிருந்​தனர்​.

வித்யா ராம்​ராஜ், விஷாலுக்கு தலா ரூ.50 லட்​சம் ஊக்​கத்​தொகை

தமிழக முதல்​வர் விஜய் வெளி​யிட்டுள்ள வாழ்த்​துச் செய்​தி​யில், ‘‘ஆசிய விளை​யாட்​டுப்​போட்​டி​யில், கலப்பு தொடர் ஓட்​டப்​பிரி​வில் வெள்​ளிப் பதக்​கம் வென்று சாதனை படைத்​துள்ள இந்​திய அணிக்​கும், அந்த அணி​யில் இடம்​பெற்​றுள்ள தமிழகத்​தைச் சேர்ந்த தடகள வீரர்​கள் வித்யா ராம்​ராஜ் மற்​றும் விஷால் டி.கே. ஆகியோ​ருக்​கும் எனது மனமார்ந்த வாழ்த்​துகள்.

இவர்​களின் சிறப்​பான சாதனையைப் பாராட்​டும் வகை​யில், தமிழக அரசு சார்​பில் தலா ரூ.50 லட்​சம் உயரிய ஊக்​கத்​தொகை வழங்​கப்​படும். இந்​தி​யா​வுக்​கும், தமிழகத்​துக்​கும் பெருமை சேர்த்​துள்ள இவர்​களின் வெற்​றிப் பயணம் மேலும் பல புதிய வரலாறுகளைப் படைக்க வாழ்த்​துகள்'’ என தெரிவித்துள்ளார்.

குத்துச்சண்டையில் சுமித் விலகல்

ஆட​வருக்​கான குத்​துச்​சண்டை 70 கிலோ எடைப் பிரி​வில் கால் இறு​திக்கு முந்​தைய சுற்​றில் இந்​தி​யா​வின் சுமித், ஈராக்​கின் அல் சர்ரே அலி காசிம் ஹம்​தானுடன் மோதி​னார். முதல் 2 சுற்​றுகளில் சுமித் முன்​னிலை​யில் இருந்​தார்.

3-வது சுற்​றில் எதி​ராளி​யிடம் இருந்து குத்து வாங்​கிய சுமித் கீழே விழுந்​தார். அப்​போது அவருக்கு முழங்​காலில் காயம் ஏற்​பட்​டது. இதனால் அவரால் போட்​டி​யில் தொடர்ந்து பங்​கேற்க முடிய​வில்​லை. இதையடுத்து நடு​வர் போட்​டியை நிறுத்​தி​விட்​டு, அல் சர்ரே அலி காசிம் ஹம்​தான் வெற்றி பெற்​ற​தாக அறி​வித்​தார்​.

டேபிள் டென்னிஸில் இந்திய ஜோடிகள் முன்னேற்றம்

டேபிள் டென்னிஸில் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா, சிண்ட்ரெல்லா தாஸ் ஜோடி 11-5, 11-4, 12-10 என்ற செட் கணக்கில் மங்கோலியாவின் புரெஞ்சர்கல் சஞ்சா, போலோர்-எர்டீன் பாட்முங்க் ஜோடியையும் யஷஸ்வி கோர்படே, தியா சித்தலே ஜோடி 11-2, 11-2, 11-4 என்ற செட் கணக்கில் ஈரானின் செதயேஷ் இலுகானி, மஹ்ஷித் அஷ்டாரி ஜோடியையும் வீழ்த்தி கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.

பதக்கத்தை நழுவவிட்ட ஆஷா இளங்கோ

மகளிருக்​கான டிரிப்​பிள் ஜம்ப்​பில் உஸ்​பெகிஸ்​தானின் டாவ்​ரோனோவா ஷரிஃபா 14.35 மீட்​டர் தூரம் தாண்டி முதலிடம் பிடித்து தங்​கப் பதக்​கம் வென்​றார். சீனா​வின் ஹுவாங் யிங்​யிங் (14.12) 2-வது இடம் பிடித்து வெள்​ளிப் பதக்​கம் பெற்​றார். மற்​றொரு சீன வீராங்​க​னை​யான லி யி 13.83 மீட்​டர் தூரம் தாண்​டி​னார். அதேவேளை​யில் இந்​தி​யா​வின் ஆஷா இளங்​கோ​வும் 13.83 தூரம் தாண்​டி​னார்.

இரு​வரும் சம அளவி​லான தூரத்தை தாண்​டிய போதி​லும் லி யி-க்கு வெண்​கலப் பதக்​கம் வழங்​கப்​பட்​டது. ஏனெனில் ஆஷா இளங்கோ இரண்​டாவது சிறந்த முயற்​சி​யாக 13.65 மீட்​டர் தூரம் தாண்​டி​ இருந்​தார். அதேவேளை​யில் லி யி 13.79 மீட்​டர் தூரம் தாண்​டி​யிருந்​தார். இதனால் கவுண்ட்​பேக் முறை​யில் ஆஷா இளங்கோ வெண்​கலப் பதக்​கத்​தை நழு​வ​விட்​டார்​.

பிரணதி நாயக் 6-வது இடம்

மகளிருக்​கான ஆர்​டிஸ்​டிக் ஜிம்​னாஸ்​டிக்​ஸில் வால்ட் பிரிவு இறு​திப் போட்​டி​யில் இந்​தி​யா​வின் பிரணதி நாயக் 13.100 புள்​ளி​களு​டன் 6-வது இடம் பிடித்து ஏமாற்​றம் அளித்​தார். கொரி​யா​வின் யோ சியோஜெங் (14.100) தங்​கப் பதக்​கத்​தை​யும், வடகொரி​யா​வின் அன் சாங் லோக் (13.033), வெ சியு (12.800) ஆகியோர் முறையே வெள்ளி மற்​றும் வெண்​கலப் பதக்​கங்களை வென்றனர்.

அரை இறுதியில் இந்திய கபடி அணிகள்

ஆசிய விளை​யாட்​டில் கபடி​யில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள நடப்பு சாம்​பிய​னான இந்​திய ஆடவர் அணி நேற்று தனது கடைசி லீக் ஆட்​டத்​தில் சீன தைபேவுடன் மோதி​யது. இதில் இந்​திய ஆடவர் அணி 37–21 என்ற புள்​ளி​கள் கணக்​கில் வெற்றி பெற்​றது.

இந்​திய அணிக்கு இது தொடர்ச்​சி​யான 4-வது வெற்​றி​யாக அமைந்​தது. தென் கொரி​யா, ஜப்​பான், வங்​கதேசம் ஆகிய அணி​களை​யும் இந்​தியா வென்​றிருந்​தது. இந்த வெற்​றிகளின் மூலம் தனது பிரி​வில் முதலிடம் பிடித்து அரை இறு​திக்கு முன்​னேறியது இந்​திய ஆடவர் அணி. மகளிருக்கான கபடியில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 50-25 என்ற புள்ளிகள் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி அரை இறுதி சுற்றில் கால்பதித்தது.

ஸ்குவாஷ் கால் இறுதியில் அனஹத் சிங்

ஆசிய விளை​யாட்டு ஸ்கு​வாஷில் மகளிர் பிரி​வில் இந்​தி​யா​வின் அனஹத் சிங், தன்வி கன்னா ஆகியோ​ரும் ஆடவர் பிரி​வில் அபய் சிங், வீர் சோட்​ரானி ஆகியோ​ரும் கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறினர். கலப்பு இரட்​டையர் பிரி​வில் இந்​தி​யா​வின் ஜோஷ்னா சின்​னப்​பா, வேல​வன் செந்​தில் குமார் ஜோடி​யும் கால் இறுதி சுற்​றில் கால்​ப​தித்​தது.

பவானி தேவி தோல்வி

வாள்வீச்சில் மகளிருக்கான தனிநபர் சேபர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பவானி தேவி 15-8 என்ற கணக்கில் மங்கோலியாவின் ஊலன் துக்ஸ்ஜர்கானை வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் பவானி தேவி 5-15 என்ற கணக்கில் சீனாவின் ராவ் சூயி-யிடம் தோல்வி அடைந்தார். பவானி தேவி தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார். மற்றொரு இந்திய வீராங்கனையான ஸ்ரேயா குப்தா கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் 6-15 என்ற கணக்கில் கொரியாவின் ஜியோன் ஹாயோங்கிடம் வீழ்ந்தார்.

ஆடவர் ஹாக்கியில் ஹாட்ரிக் வெற்றி

ககமிகஹாரா: ஆசிய விளை​யாட்டு ஹாக்​கி​யில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள நடப்பு சாம்​பிய​னான இந்​திய ஆடவர் அணி தனது 3-வது லீக் ஆட்​டத்​தில் நேற்று கொரி​யா​வுடன் மோதி​யது. இதில் இந்​திய அணி 8-2 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்​றது.

இந்​திய அணி தரப்​பில் தில்​பிரீத் சிங் ஹாட்​ரிக் கோல் (10, 26 மற்​றும் 32-வது நிமிடங்​கள்) அடித்து அசத்​தி​னார். இந்த 3 கோல்​களுமே ஃபீல்டு கோலாக அமைந்​திருந்​தது. அபிஷேக் 2 கோல்​களும் (15, 38-வது நிமிடங்​கள்), ஷில்​லானந்த் லக்ரா (4-வது நிமிடம்), கேப்​டன் ஹர்​மன்​பிரீத் சிங் (11-வது நிமிடம்), ரஜிந்​தர் சிங் (60-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்​தனர்.

இந்​திய ஆடவர் அணிக்கு இது ஹாட்​ரிக் வெற்​றி​யாக அமைந்​தது. இந்​திய அணி தனது முதல் ஆட்​டத்​தில் 13-1 என்ற கோல் கணக்​கில் இந்​தோ​னேஷி​யா​வை​யும், 2-வது ஆட்​டத்​தில் இலங்​கையை 16-1 என்ற கோல் கணக்​கிலும் தோற்​கடித்து இருந்​தது. தற்​போதைய வெற்​றி​யின் மூலம் 9 புள்​ளி​களு​டன் தனது பிரி​வில் முதலிடம் வகிக்​கும் இந்திய அணி அரை இறு​திக்கு முன்​னேறு​வதை உறுதி செய்​தது. இந்​திய அணி தனது அடுத்த ஆட்​டத்​தில் நாளை ஜப்​பானுடன் மோதுகிறது.

வெண்கலம் வென்ற சீமா குமாரி முதல் ‘பதக்கப் பட்டியல்’ வரை | ஆசிய விளையாட்டு போட்டி ஹைலைட்ஸ்
உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்த கபடி! | ‘டைகர்’ ராஜரத்தினம் 3

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in