ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: 7-ம் நிலை வீரரை வீழ்த்தினார் ஆயுஷ் ஷெட்டி

ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: 7-ம் நிலை வீரரை வீழ்த்தினார் ஆயுஷ் ஷெட்டி
Updated on
1 min read

நிங்க்போ: சீ​னா​வின் நிங்க்போ நகரில் ஆசிய பாட்மிண்டன் சாம்​பியன்​ஷிப் தொடர் நடை​பெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்​றையர் பிரி​வில் உலகத் தரவரிசை​யில் 25-வது இடத்​தில் உள்ள இந்​தி​யா​வின் ஆயுஷ் ஷெட்டி, 7-வது இடத்​தில் உள்ள சீனா​வின் ஷி பெங்குடன் மோதி​னார்.

51 நிமிடங்​கள் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் ஆயுஷ் ஷெட்டி 21-13, 21-16 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று 2-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார். 30-ம் நிலை வீர​ரான இந்தியா​வின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-18, 9-21, 11-21 என்ற செட் கணக்​கில் 11-ம் நிலை வீர​ரான சிங்​கப்​பூரின் லோ கீன் யூவிடம் தோல்வி அடைந்​தார்.

அதேவேளை​யில் 35-ம் நிலை வீர​ரான இந்​தி​யா​வின் ஹெச்.எஸ்​.பிர​னாய் 24-22, 21-12 என்ற செட் கணக்​கில் 62-ம் நிலை வீர​ரான வியட்​நாமின் நூயன் ஹாய் டாங்கை வீழ்த்தி 2-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார். 12-ம் நிலை வீரரான லக் ஷயா சென் 12-21, 19-21 என்ற செட் கணக்​கில் 22-ம் நிலை வீர​ரான ஹாங் காங்​கின் லீ செக் யுவிடம் தோல்வி அடைந்தார்.

மகளிர் ஒற்​றையர் பிரிவு முதல் சுற்​றில் இரு முறை ஒலிம்பிக்​கில் பதக்​கம் வென்ற இந்தியாவின் பி.​வி.சிந்து 15-21, 21-11, 21-19 என்ற செட் கணக்​கில் 38-ம் நிலை வீராங்கனை​யான மலேசி​யா​வின் வாங் லிங் ஷிங்கை வீழ்த்தி 2-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார்.

ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: 7-ம் நிலை வீரரை வீழ்த்தினார் ஆயுஷ் ஷெட்டி
அண்ணாநகர் தொகுதியில் வாக்குகளை அள்ளப்போகும் வேட்பாளர் யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in