

மக்காவ்: சீனாவின் மக்காவ் நகரில் மக்காவ் ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றைர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் அஷ்மிதா சாலிகா 21-16, 21-18 என்ற செட் கணக்கில் கொரியாவின் கிம் மின் சன்-ஐ வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார்.
அதேவேளையில் மற்றொரு இந்திய வீராங்கனையான அன்மோல் கார்ப் 21-14, 15-21, 13-21 என்ற செட் கணக்கில் சீனாவின் ஹான் கியான் ஷியிடம் தோல்வி அடைந்தார்.