அலெக்ஸ் கேரி 106, கவாஜா 82 ரன்கள் விளாசல்: முதல் இன்னிங்ஸில் 371 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா

அலெக்ஸ் கேரி

அலெக்ஸ் கேரி

Updated on
2 min read

அடிலெய்டு: இங்கிலாந்து அணிக்கு எதி​ரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்​கெட் தொடரின் 3-வது போட்​டி​யின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்​திரேலிய அணி 371 ரன்​கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அலெக்ஸ் கேரி 106 ரன்​களும், உஸ்​மான் கவாஜா 82 ரன்களும் விளாசினர்.

அடிலெய்​டில் நேற்று தொடங்​கிய இந்த டெஸ்ட் போட்​டி​யில் டாஸ் வென்ற ஆஸ்​திரேலிய அணி பேட்​டிங்கை தேர்வு செய்​தது. இந்த போட்​டிக்​கான விளை​யாடும் லெவனை ஆஸ்​திரேலியா நேற்று முன்​தினமே அறி​வித்து இருந்​தது. இதில் ஸ்டீவ் ஸ்மித் இடம் பெற்​றிருந்​தார். இந்​நிலை​யில் நேற்று போட்டி தொடங்​கு​வதற்கு முன்னதாக உடல்​நலமின்மை காரண​மாக ஸ்மித் வில​கி​னார். இதனால் உஸ்​மான் கவாஜா அணி​யில் சேர்க்​கப்​பட்​டார்.

பேட்​டிங்கை தொடங்​கிய ஆஸ்​திரேலிய அணி தொடக்​கத்​தில் தடுமாறியது. ஜேக் வெத​ரால்டு 27 பந்​துகளில், 4 பவுண்டரிகளுடன் 18 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஜோப்ரா ஆர்ச்​சர் வீசிய பவுன்​ஸரை விளாச முயன்ற போது விக்​கெட் கீப்​பர் ஜேமி ஸ்மித்​திடம் கேட்ச் ஆனது. நிதான​மாக விளை​யாடிய டிரா​விஸ் ஹெட் 28 பந்​துகளில், 10 ரன்​கள் சேர்த்த நிலை​யில் பிரைன் கார்ஸ் பந்தை பாயின்ட் திசை​யில் அடித்த போது ஸாக் கிராவ்லி பாய்ந்து ஒற்றை கையால் பிடித்து அசத்​தி​னார்.

33 ரன்​களுக்கு 2 விக்​கெட்​களை இழந்த நிலை​யில் மார்​னஸ் லபுஷேன், உஸ்​மான் கவாஜா ஜோடி பார்ட்​னர்​ஷிப்பை கட்டமைத்தது. 61 ரன்​கள் சேர்த்த இந்த ஜோடியை ஜோப்ரா ஆர்ச்சர் பிரித்​தார். மார்​னஸ் லபுஷேன் 40 பந்​துகளில், 19 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஜோப்ரா ஆர்ச்​சர் வீசிய பந்தை கால்​களை நகர்த்​தாமல் லெக் திசை​யில் அடிக்க முயன்ற போது மிட் விக்கெட் திசை​யில் பிரைடன் கார்​ஸிடம் எளி​தாக கேட்ச் ஆனது.

இதையடுத்து களமிறங்​கிய கேமரூன் கிரீன் ரன் ஏதும் எடுக்​காத நிலை​யில் ஜோப்ரா ஆர்ச்​சர் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். இந்த இரு விக்​கெட்​களும் ஓரே ஓவரில் சரிந்​திருந்​தது. இதன் பின்​னர் கவாஜாவுடன் இணைந்த விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மே​னான அலெக்ஸ் கேரி அழுத்​தமின்றி சீராக ரன்​கள் சேர்த்​தார். தனது 27-வது அரை சதத்தை கடந்த கவாஜா 126 பந்​துகளில், 10 பவுண்​டரி​களு​டன் 82 ரன்​கள் எடுத்த நிலை​யில் வில் ஜேக்ஸ் வீசிய பந்தை ஸ்வீப் ஷாட் விளை​யாடிய போது டீப் ஸ்கொயர் லெக் திசை​யில் நின்ற ஜோஷ் டங்​கிடம் கேட்ச் ஆனது.

5-வது விக்​கெட்​டுக்கு கவாஜா, அலெக்ஸ் கேரி ஜோடி 138 பந்துகளில், 91 ரன்​கள் சேர்த்​தது. இதையடுத்து களமிறங்​கிய ஜோஷ் இங்​லிஷ் 32 ரன்​களில் ஜோஷ் டங் பந்​தில் போல்​டா​னார். அவரைத் தொடர்ந்து கேப்​டன் பாட் கம்​மின்ஸ் 13 ரன்​களில் பிரைன் கார்ஸ் பந்​தில் வெளி​யேறி​னார். சிறப்​பாக விளை​யாடி தனது 3-வது சதத்தை அடித்த அலெக்ஸ் கேரி 143 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 8 பவுண்​டரி​களு​டன் 106 ரன்​கள் எடுத்த நிலை​யில் வில் ஜேக்ஸ் பந்​தில் ஆட்​ட​மிழந்​தார்.

நேற்​றைய முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் ஆஸ்​திரேலிய அணி 83 ஓவர்​களில் 8 விக்​கெட்​ இழப்​புக்கு 326 ரன்​கள் குவித்​தது. மிட்​செல் ஸ்டார்க் 63 பந்​துகளில், 4 பவுண்​டரி​களு​டன் 33 ரன்​களும், நேதன் லயன் ரன் ஏதும் சேர்க்​காமல் களத்​தில் இருந்​தனர். இங்​கிலாந்து அணி தரப்​பில் ஜோப்ரா ஆர்ச்​சர் 3 விக்​கெட்​களை வீழ்​த்​தி​னார்​. பிரைடன்​ ​கார்​ஸ்​, வில்​ ஜேக்​ஸ்​ ஆகியோர்​ தலா 2 விக்​கெட்​களை​யும்​, ஜோஷ் டங்​ ஒரு விக்​கெட்​டை​யும்​ கைப்​பற்​றினர்​.

இரண்டாம் நாள் ஆட்டத்தில் மேலும் 45 ரன்கள் எடுத்து நிலையில் ஆஸ்திரேலிய அணி ஆட்டமிழந்தது. தொடர்ந்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. மத்திய உணவு நேர இடைவேளையின் போது 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 59 ரன்கள் எடுத்திருந்தது இங்கிலாந்து அணி.

56 ஆயிரம் ரசிகர்​கள்: அடிலெய்​டில் நேற்று தொடங்​கிய ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3-வது போட்​டியை காண்​ப​தற்​காக மைதானத்துக்கு 56,298 பேர் வருகை தந்​திருந்​தனர்.

5 ரன்​னில் தப்​பித்த கவாஜா: ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேனான உஸ்மான் கவாஜா 5 ரன்களில் இருந்த போது 2-வது சிலிப் திசையில் கொடுத்த கேட்ச்சை ஹாரி புரூக் தவறவிட்டார். இதற்கான பலனை இங்கிலாந்து அணி அனுபவித்தது. ஏனெனில் அவர், லபுஷேன் மற்றும் அலெக்ஸ் கேரியுடன் இணைந்து வலுவான பார்ட்னர் ஷிப்களை அமைத்து அணிக்கு பலம் சேர்த்தார்.

கருப்பு பட்டை அணிந்த வீரர்​கள்: அடிலெய்​டில் நேற்று தொடங்கிய 3-வது டெஸ்ட் போட்​டி​யில் ஆஸ்​திரேலி​யா, இங்​கிலாந்து அணி வீரர்​கள் கருப்பு பட்டை அணிந்து கலந்து கொண்டனர். கடந்த 14-ம் தேதி சிட்னி போண்டி கடற்​கரை​யில் நிகழ்ந்த தீவிர​வாத தாக்​குதலில் 16 பேர் இறந்​திருந்​தனர். இவர்களுக்கு அஞ்​சலி செலுத்​தும்​ வகை​யில்​ இரு அணி வீரர்​களும்​ கருப்​பு பட்​டை அணிந்​திருந்​தனர்.

<div class="paragraphs"><p>அலெக்ஸ் கேரி</p></div>
“ஸ்டாலின் பேச்சு அவரது பயத்தை காட்டுகிறது” - விமர்சிக்கிறார் நாராயணன் திருப்பதி | நேர்காணல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in