

பியூனஸ் ஏர்ஸ்: நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா கால்பந்து அணி வரும் 31-ம் தேதி கவுதமாலா அணிக்கு எதிராக நட்புரீதியிலான போட்டியில் விளையாட உள்ளது.
இந்த ஆட்டம் பியூனஸ் அயர்ஸில் உள்ள லா பொம்போனேராவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கான அர்ஜெண்டினா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸி சேர்க்கப்பட்டுள்ளார். வரும் 27-ம் தேதி அர்ஜெண்டினா - ஸ்பெயின் அணிகள் நட்புரீதியிலான கால்பந்து போட்டியில் விளையாட இருந்தன.
ஆனால் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் பிரச்சினை காரணமாக இந்த ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாகவே தற்போது கவுதமாலா அணிக்கு எதிராக அர்ஜெண்டினா அணி விளையாட உள்ளது. மெஸ்ஸி விளையாட உள்ள நிலையில் காயம் காரணமாக முன்கள வீரர் லவுதரா மார்டினெஸ், டிபன்டர் லிசாண்ட்ரோ மார்டினெஸ், நடுகள வீரர் ஜியோவானி லோ செல்சோ ஆகியோர் அணியில் சேர்க்கப்படவில்லை.