சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அம்ப்ரிஷ்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அம்ப்ரிஷ்
Updated on
1 min read

ஹைதராபாத்: ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றிருந்த வலதுகை மிதவேகப்பந்து வீச்சாளரான ஷிவம் மாவி இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து அவருக்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த ஆல்ரவுண்டரான ஆர்.எஸ்.அம்ப்ரிஷ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் யு-19 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் அம்ப்ரிஷ் இடம் பெற்று இருந்தார். அந்தத் தொடரில் அவர், 11 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். வலதுகை மித வேகப்பந்து வீச்சாளரும், இடது கை பேட்ஸ் மேனுமான அம்ப்ரிஷை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.30 லட்சத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அம்ப்ரிஷ்
நிதின் நவீன் தலைமையில் பாஜகவில் மகளிருக்கு 33 சதவீத ஒதுக்கீட்டுடன் புதிய அணி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in