

சின்சினாட்டி: அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் வரும் 11-ம் தேதி 23-ம் தேதி வரை சின்னாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடைபெறகிறது. இந்நிலையில் இந்தத் தொடரில் இருந்து உலகின் 2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் விலகி உள்ளார்.
கடந்த மார்ச் மாதம் வலது மணிக்கட்டு பகுதியில் அல்கராஸுக்கு காயம் ஏற்பட்டது. இந்த காயம் இன்னும் குணமாகாததால், சின்சினாட்டி ஓபன் தொடரிலிருந்து அவர், விலகி உள்ளார்.
அல்காரஸ் கடைசியாக பார்சிலோனா ஓபன் தொடரில் விளையாடினார். அதன்பின், ஃபிரெஞ்ச் ஓபன் மற்றும் விம்பிள்டன் உட்பட புல்வெளி மைதானத்தில் நடைபெற்ற அனைத்துத் தொடர்களையும் காயம் காரணமாக தவறவிட்டார்.