

புதுடெல்லி: உலக சாம்பியன்ஷிப் பாட்மிண்டன் தொடர் வரும் 17-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை டெல்லியில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான ‘டிரா’ வெளியீடு நேற்று டெல்லியில் நடைபெற்றது.
இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, நடப்பு சாம்பியனான சீனாவின் ஷி யூகியுடன் மோதுகிறார். லக் ஷயா சென், ஆஸ்திரியாவின் காலின்ஸ் வெலன்டைனுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து, 141-வது இடத்தில் உள்ள அயர்லாந்தின் சோபியா நோபளை சந்திக்கிறார். உன்னதி ஹூடா, மியான்மரின் தேத் தார் துசாருடன் மோதுகிறார்.
மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் காயத்ரி கோபிசந்த், ட்ரீசா ஜாலி ஜோடியானது ஸ்பெயினின் பவுலோ லோபஸ், லூசியா ரோட்ரிக்ஸ் ஜோடியை எதிர்கொள்கிறது. ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடிக்கு முதல் சுற்றில் ‘பை’ வழங்கப்பட்டுள்ளது.