“வெற்றி பெற்றால் மட்டுமே ரன்களுக்கு மதிப்பு உண்டு” - எய்டன் மார்க்ரம்

“வெற்றி பெற்றால் மட்டுமே ரன்களுக்கு மதிப்பு உண்டு” - எய்டன் மார்க்ரம்
Updated on
2 min read

ராய்ப்பூர்: அணி வெற்றி பெற்​றால் மட்​டுமே பேட்​ஸ்​மேன்​கள் குவித்த ரன்​களுக்கு மதிப்பு உண்டு என தென் ஆப்​பிரிக்க கிரிக்கெட் அணி​யின் பேட்​ஸ்​மே​னான எய்​டன் மார்க்​ரம் தெரிவித்துள்ளார்.

இந்​தி​யா​வுக்கு எதி​ராக நேற்று முன்​தினம் ராய்ப்​பூரில் நடைபெற்ற 2-வது ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டி​யில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்றது. 359 ரன்​கள் இலக்கை விரட்​டிய தென் ஆப்​பிரிக்க அணி 4 பந்துகளை மீதம் வைத்து 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 362 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. எய்​டன் மார்க்​ரம் 110 ரன்​களும், மேத்யூ ப்ரீட்​ஸ்கே 68 ரன்​களும், டெவால்ட் பிரே​விஸ் 54 ரன்​களும் விளாசி அணி​யின் வெற்​றி​யில் முக்​கிய பங்கு வகித்​தனர்.

இந்த வெற்​றி​யின் மூலம் 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரை 1-1 என சமநிலையை அடையைச் செய்​துள்​ளது தென் ஆப்​பிரிக்க அணி. தொடரை வெல்​வது யார்? என்​பதை தீர்​மானிக்​கும் கடைசி மற்​றும் 3-வது ஒரு​நாள் போட்டி நாளை (6-ம் தேதி) விசாகப்​பட்​டினத்​தில் நடை​பெற உள்​ளது. இந்நிலை​யில் ராய்ப்​பூர் போட்​டி​யில் ஆட்ட நாயகன் விருது வென்ற பின்​னர் எய்​டன் மார்க்​ரம் கூறிய​தாவது:

நியாய​மாக கூறவேண்​டுமெனில், போட்​டிகளில் வெற்றி பெற்றால் மட்​டுமே பேட்​ஸ்​மேன்​கள் எடுக்​கும் ரன்​கள் முக்கியத்துவம் பெறும். இந்த போட்​டி​யிலும் நாங்​கள் தோல்வி அடைந்​திருந்​தால் முதல் ஆட்​டத்​தில் நான் எவ்​வளவு துயரப்பட்டிருப்​பேனோ அவ்​வளவு துயரத்​தில் இருந்​திருப்​பேன். போட்​டி​யில் வெற்​றியை பெறு​வதே மகிழ்ச்​சியை கொடுக்​கும்.

முதல் போட்​டி​யில் தொடக்​கத்​திலேயே 3 விக்​கெட்​களை இழந்​தோம். இது ஆட்​டத்​தின் முடி​வில் பெரிய வித்​தி​யாசத்தை ஏற்​படுத்​தி​ய​தாக உணர்ந்​தேன். தனிப்​பட்ட முறை​யில் அந்த தோல்விக்கு நானே காரணம் என கரு​தினேன். முதல் ஆட்​டத்​தில் ஏற்​பட்ட அதே சூழ்​நிலைகளை இந்த ஆட்​டத்​தி​லும் எதிர்​கொண்​டோம். 360 ரன்கள் இலக்கை எப்​படி துரத்த வேண்​டும் என்​பதை அறிவோம். சற்று பொறுப்​புட​னும் ஆட்​டத்​தின் இடை​யில் புத்திசாலித்தனமாகவும் செயல்​பட​வேண்​டும்.

டெவால்ட் பிரே​விஸ் பந்தை வெகு தொலை​வுக்கு அடிக்​கும் திறன் கொண்​ட​வர். அவர், பந்து வீச்​சாளர்​களை அழுத்​தத்​துக்கு உள்ளாக்​கு​வதற்கு பயப்​ப​டாதவர். கிரிக்​கெட் பிரியர்​களாக, இதைப் பார்ப்​பது மிக​வும் நன்​றாக இருக்​கும். அவரது ஆட்​டத்தை நிச்​ச​யம் ரசிகர்​கள் ரசிப்​பார்​கள். மேத்யூ ப்ரீட்​ஸ்கே தனது ஒருநாள் கிரிக்​கெட் வாழ்க்​கை​யில் அற்​புத​மான தொடக்​கத்​தைப் பெற்​றுள்​ளார்.

ஆட்​டத்​தின் சூழ்​நிலையை அவர், மிகச் சிறப்​பாகக் கையாண்டார். அவர் 10 அல்​லது 12 ஆட்​டங்​களில் மட்​டுமே விளையாடி​யுள்​ளார் என்று நினைக்​கிறேன். ஆனால், ராய்ப்​பூரில் அவர் பேட்​டிங் செய்த விதம், குறைந்​தது 50 ஆட்​டங்​களில் பங்கேற்ற வீரர் போல் இருந்​தது. ஆட்​டத்தை முன்​னெடுத்​துச் செல்லக்​கூடிய மேத்யூ ப்ரீட்​ஸ்கே போன்ற வீரர் அணி​யில் இருப்பது சாதக​மான விஷ​யம்​. இவ்​வாறு எய்​டன்​ மார்க்​ரம்​ கூறினார்.

“வெற்றி பெற்றால் மட்டுமே ரன்களுக்கு மதிப்பு உண்டு” - எய்டன் மார்க்ரம்
ஆஸி. மண்ணில் முதன்முறையாக ஜோ ரூட் சதம்: முதல் நாளில் இங்கிலாந்து 325 ரன்கள் குவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in