இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: ஆப்கானிஸ்தான் அணிக்கு இப்ராகிம் ஸத்ரன் கேப்டன்

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: ஆப்கானிஸ்தான் அணிக்கு இப்ராகிம் ஸத்ரன் கேப்டன்
Updated on
1 min read

காபூல்: ஆப்​கானிஸ்​தான் கிரிக்​கெட் அணி அடுத்த மாதம் இந்தியா​வில் சுற்​றுப்​பயணம் செய்து 3 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 தொடரில் விளை​யாட உள்​ளது. இந்த தொடர் செப்​டம்​பர் 13 முதல் 17 வரை டெல்​லி​யில் உள்ள அருண் ஜேட்லி கிரிக்​கெட் மைதானத்தில் நடை​பெறுகிறது.

இந்​நிலை​யில் இந்த தொடருக்​கான ஆப்​கானிஸ்​தான் அணி அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இப்​ராகிம் ஸத்​ரன் கேப்​ட​னாக அறிவிக்கப்​பட்​டுள்​ளார். தோள்​பட்டை காயத்​தில் இருந்து குணமடைந்​துள்ள சீனியர் வேகப்​பந்து வீச்​சாள​ரான நவீன் உல் ஹக் அணிக்கு திரும்பி உள்​ளார். அவருடன் வேகப்​பந்து வீச்சாளர்களாக ஃபசல் ஹக் ஃபரூக்​கி, அப்​துல்லா அஹ்மத்​ஸாய் ஆகியோ​ரும் ஆல்​ர​வுண்​ட​ராக அஸ்​மதுல்லா ஒமர்​சா​யும் இடம் பெற்​றுள்​ளனர்.

அனுபவம் வாய்ந்த ஆல்​ர​வுண்​ட​ரான குல்​பா​தின் நைப்​பும் அணிக்கு திரும்பி உள்​ளார். சுழற்​பந்து வீச்​சில் ரஷித் கான், நூர் அஹமது, நங்​யால் கரோட்​டி, முகமது நபி ஆகியோர் சேர்க்​கப்​பட்​டுள்​ளனர். 2-வது விக்​கெட்​கீப்​பர் பேட்​ஸ்மே​னாக நூர் ரஹ்​மான் அறி​முக வீர​ராக சேர்க்​கப்​பட்​டுள்​ளார்.

ஆப்​கானிஸ்​தான் அணி விவரம்: இப்​ராகிம் ஸ்த்​ரன் (கேப்​டன்), ரஹ்மனுல்லா குர்​பாஸ், நூர் ரஹ்​மான், செதி​குல்லா அடல், தர்​வீஷ் ரசூலி, அஸ்​மத்​துல்லா ஒமர்​சாய், குல்​பா​தின் நைப், முகமது நபி, ரஷித் கான், நங்​யால் கரோட்​டி, நூர் அஹமது, முஜீப் உர் ரஹ்​மான், ஃபசல் ஹக் ஃபரூக்​கி, அப்​துல்லா அஹ்மத்​ஸாய், நவீன்​-உல்​-ஹக்​.

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: ஆப்கானிஸ்தான் அணிக்கு இப்ராகிம் ஸத்ரன் கேப்டன்
வெளிநாட்டு மண்ணில் 2,500 ரன்கள் குவிப்பு: தோனி சாதனையை முறியடித்தார் ரிஷப் பந்த்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in