தமிழ்நாடு டிராகன்ஸ் அபார வெற்றி

தமிழ்நாடு டிராகன்ஸ் அபார வெற்றி
Updated on
1 min read

சென்னை: ஹாக்கி இந்​தியா லீக் போட்​டி​யில் அக்​கார்ட் தமிழ்​நாடு டிராகன்ஸ் அணி வெற்​றியைப் பெற்​றுள்​ளது.

இந்​தப் போட்டி சென்னை எழும்​பூரிலுள்ள மேயர் ராதா கிருஷ்ணன் மைதானத்​தில் நேற்று நடை​பெற்றது. இ​தில் தமிழ்​நாடு டிராகன்ஸ் அணி 3-2 என்ற கோல் கணக்​கில் சிறப்​பாக விளை​யாடி சூர்மா ஹாக்கி கிளப் அணியை வென்றது.

ஆட்​டம் தொடங்​கிய 9-வது நிமிடத்​திலேயே தமிழ்​நாடு டிராகன்ஸ் அணி வீரர் செல்​வ​ராஜ் கனக​ராஜ் ஒரு கோல் அடித்​தார். இதையடுத்து 1-0 என்ற கணக்​கில் தமிழ்​நாடு டிராகன்ஸ் முன்​னிலை பெற்​றது.

இதைத் தொடர்ந்து 13-வது நிமிடத்​தில் தமிழ்​நாடு டிராகன்ஸ் வீரர் பிளேக்கோவர்ஸ் ஒரு கோலடித்து 2-0 என முன்​னிலையை ஏற்​படுத்​தி​னார்.

ஆனால் அதே நிமிடத்​திலேயே சூர்மா அணி வீரர் ஹர்​மன் ​பிரீத் சிங் ஒரு கோலடிக்க 2-1 என்ற நிலை ஏற்​பட்​டது. ஆனால் 23-வது நிமிடத்​தில் தமிழ்​நாடு டிராகன்ஸ் அணி​யின் உத்​தம் ​சிங் ஒரு கோலடித்து அணிக்கு 3-1 என்ற கணக்​கில் முன்​னிலையை ஏற்படுத்தி​னார்.

ஆட்​டத்​தின் 39-வது நிமிடத்​தில் சூர்மா அணி​யின் மணீந்​தர் சிங் ஒரு கோலடித்​தார். இருந்​த போதும் இறுதி வரை இந்த நிலை நீடிக்கவே 3-2 என்ற கணக்​கில் தமிழ்​நாடு டிராகன்​ஸ் அணி அபார வெற்றி கண்​டது.

தமிழ்நாடு டிராகன்ஸ் அபார வெற்றி
ஹைதராபாத் வீரர் அமன் இரட்டைச் சதம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in