

சென்னை: 3-வது ஹெச்சிஎல் தேசிய இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் பிரிவில் நேற்று நடைபெற்ற கால் இறுதி சுற்றில் அபய் சிங், வேலவன் செந்தில் குமார் ஜோடி 11-4, 11-2 என்ற நேர் செட் கணக்கில் ஷுபம், வேதாந்த் படேல் ஜோடியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது.
கலப்பு இரட்டையர் பிரிவு கால் இறுதியில் வேலவன் செந்தில் குமார், ஜோஷ்னா சின்னப்பா ஜோடி 11-4, 11-5 என்ற செட் கணக்கில் ரோஷன் ராஜ்குமார், சஹானா கலைவாணன் ஜோடியை வீழ்த்தியது.