8 அணிகள் பங்கேற்கும் ‘ஏ’ டிவிஷன் வாலிபால் லீக் இன்று தொடக்கம்

8 அணிகள் பங்கேற்கும் ‘ஏ’ டிவிஷன் வாலிபால் லீக் இன்று தொடக்கம்
Updated on
1 min read

சென்னை: சென்னை மாவட்ட வாலி​பால் சங்​கம் சார்​பில் ‘ஏ’ டிவிஷன் வாலி​பால் லீக் சாம்​பியன்​ஷிப் இன்று (15-ம் தேதி) எழும்​பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளை​யாட்​டரங்​கில் தொடங்​கு​கிறது. சென்னை மாவட்​டத்​தைச் சேர்ந்த டாப் 8 அணி​கள் இந்த ‘ஏ’ டிவிஷன் லீக் சாம்​பியன்​ஷிப் போட்​டி​யில் பங்​கேற்​கின்​றன.

ஒவ்​வொரு அணி​யும் ரவுண்ட் ராபின் முறை​யில் மற்ற அனைத்து அணி​களு​டன் தலா ஒரு முறை மோதும். அதிக புள்​ளி​களைப் பெறும் அணி லீக் சாம்​பிய​னாக அறிவிக்​கப்​படும். அதே​போல், கடைசி இரண்டு இடங்​களைப் பிடிக்​கும் அணி​கள் தரம் குறைக்​கப்​பட்டு ‘பி’ டிவிஷனுக்கு மாற்​றப்​படும்.

மறைந்த சர்​வ​தேச வாலி​பால் முன்​னாள் வீரரும், சென்னை மாவட்ட வாலி​பால் சங்​கத்​தின் செய​லா​ள​ராகப் பணி​யாற்​றிய​வரு​மான ஏ.கே.சித்​திரைப்​பாண்​டியன் நினை​வாக இந்த சாம்​பியன்​ஷிப் போட்டி நடத்​தப்​படு​கிறது. கடந்த ஆண்​டில் ‘பி’ டிவிஷன் பிரி​வில் வெற்றி பெற்ற அக்னி பிரண்ட்ஸ் கிளப் 2-வது இடம் பிடித்த சுங்​கவரித்​துறை ஆகிய அணி​கள், இந்த ஆண்டு ‘ஏ’ டிவிஷன் லீக் சாம்​பியன்​ஷிப் போட்​டிக்கு தரம் உயர்த்​தப்​பட்​டுள்​ளன.

இந்த அணி​களு​டன் எஸ்​.ஆர்​.எம்., ஐசிஎஃப், டி.ஜி.வைஷ்ணவா கல்​லூரி, வரு​மானவரித்​துறை, இந்​தி​யன் வங்​கி, ஐஓபி ஆகிய அணி​களும் கலந்து கொள்​கின்​றன. கடந்த ஆண்டு எஸ்​ஆர்​எம் அணி முதலிட​மும், டி.ஜி.வைஷ்ணவா கல்​லூரி 2-வது இடமும் பிடித்​திருந்​தன. இந்த தொடருக்கு மொத்த பரிசுத் தொகை ரூ.9 லட்​சம் ஆகும். எஸ்​என்ஜே குழு​மம், ஆச்சி குழு​மம், 2 குரோ ஹெச்​ஆர், ரோமா குழு​மம் ஆகியவை ஸ்பான்​சர்​களாக உள்​ளன.

போட்​டிக்​கான ஏற்​பாடு​களை ஜெய​முரு​கன், அர்​ஜூன் துரை, ஆர்​.​வி.எம்​.ஏ.​ராஜன், ஜெகதீசன், பழனியப்​பன், கேசவன்​ ஆகியோர்​ செய்​துள்​ளனர்​.

8 அணிகள் பங்கேற்கும் ‘ஏ’ டிவிஷன் வாலிபால் லீக் இன்று தொடக்கம்
அந்தமானில் ரூ.36,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் அழிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in