IPL 2023 | வர்ணனையாளராக இணையும் ஆர்சிபி கேப்டன் டூப்ளசி

டூப்ளசி | கோப்புப்படம்
டூப்ளசி | கோப்புப்படம்
Updated on
1 min read

நடப்பு ஐபிஎல் சீசனில் எஞ்சியுள்ள குவாலிபையர் 2 மற்றும் இறுதிப் போட்டியில் தொலைக்காட்சி வர்ணனையாளராக இணைகிறார் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் டூப்ளசி. நடப்பு சீசனில் 730 ரன்களை எடுத்துள்ளார் அவர். இருந்தும் அவரது அணி முதல் சுற்றோடு நடப்பு சீசனில் இருந்து வெளியேறி உள்ளது.

ரியலிஸ்டிக் ஹாலோகிராம் தொழில்நுட்பத்தின் மூலம் அவர் தென்னாப்பிரிக்காவில் இருந்து வர்ணனையில் இணைகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“ஐபிஎல் 2023 சீசனின் இரண்டாவது குவாலிபையர் மற்றும் இறுதிப் போட்டியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழுவினருடன் வர்ணனையாளராக இணைவதில் மகிழ்ச்சி” என டூப்ளசி தெரிவித்துள்ளார்.

இதேபோல கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர் வெங்கடேஷ் ஐயர், தமிழ் வர்ணனை குழுவினருடன் இந்த இரண்டு போட்டிகளிலும் பேசுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது குவாலிபையர் போட்டியில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் விளையாடுகின்றன. இதில் வெல்லும் அணி ஞாயிறு அன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் விளையாடும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in