காமன்வெல்த் போட்டி: தமிழக பளுதூக்கும் வீரர் சதீஷுக்கு தங்கப் பதக்கம்

காமன்வெல்த் போட்டி: தமிழக பளுதூக்கும் வீரர் சதீஷுக்கு தங்கப் பதக்கம்
Updated on
1 min read

20-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் பளுதூக்குதல் பிரிவில், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் சதீஷ் குமார் சிவலிங்கம் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

காமன்வெல்த் போட்டிகளில் சதீஷ் குமார் பங்கேற்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஸ்காட்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 77 கிலோ எடைப் பிரிவு பளுதூக்கும் போட்டியில் சதீஷ் குமார் சிவலிங்கம் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

இதே போட்டியில், மற்றொரு இந்திய வீரர் ரவி கட்லு வெள்ளிப் பதக்கம் வென்றார். வெண்கலப் பதக்கத்தை ஆஸ்திரேலிய வீரர் பிரான்கோயிஸ் எட்டூண்டி வென்றார்.

22 வயதான சதீஷ் சிவலிங்கம் 149+179 என மொத்தம் 328 கிலோ எடையை தூக்கி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

முன்னதாக நடைபெற்ற மகளிர் 63 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதலில், இந்தியாவின் பூனம் யாதவ் வெண்கலப்பதக்கம் வென்றார். ஸ்நாட்ச், க்ளீன் அண்ட் ஜெர்க் பிரிவுகளில் மொத்தம் 202 எடையைத் தூக்கி பூனம் யாதவ் வெண்கலம் வென்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in