அமெரிக்க தடகள போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் தேஜஸ்வின் சங்கர்

அமெரிக்க தடகள போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் தேஜஸ்வின் சங்கர்
Updated on
1 min read

புதுடெல்லி: அமெரிக்காவில் நடைபெற்ற தடகள போட்டியில் டெகத்லானில் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக வளாகத்தில் ஜிம் கிளிக் ஷூட்அவுட் தடகள போட்டி நடைபெற்றது. அமெரிக்க தடகள சம்மேளனத்தின் சார்பில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் இந்திய வீரர்தேஜஸ்வின் சங்கர், டெகத்லானில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

டெகத்லான் என்பது உயரம் தாண்டுதல், 400 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 110 மீட்டர்தடைதாண்டும் ஓட்டம், வட்டு எறிதல், போல் வால்ட், ஈட்டி எறிதல், 1500 மீட்டர் ஓட்டம் என 10 வகையிலான போட்டியைஉள்ளடக்கியது. இதில் தேஜஸ்வின் சங்கர் ஒட்டுமொத்தமாக 7,648 புள்ளிகளை குவித்தார். இது 2011-ம் ஆண்டு பாரதிந்தர் சிங்கின் தேசிய சாதனையான 7,658 -ஐ விட 10 புள்ளிகள் குறைவாகும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in