உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் - வெண்கலம் வென்றார் இந்தியாவின் மனுபாகர்

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் - வெண்கலம் வென்றார் இந்தியாவின் மனுபாகர்
Updated on
1 min read

போபால்: உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் மனுபாகர் வெண்கலப் பதக்கம் வென்றார்.

மத்தியபிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் பதக்க போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் மனுபாகர் 20 புள்ளிகள் சேர்த்து வெண்கலப் பதக்கம் பெற்றார். ஜெர்மனியின் டோரீன் 30 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கமும், சீனாவின் யு ஸியு 29 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். சர்வதேச போட்டியில் மனுபாகர் இரு வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் பதக்கம் பெற்றுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in