ஜானி பேர்ஸ்டோவுக்கு ஐபிஎல்-ல் அனுமதி மறுப்பு

ஜானி பேர்ஸ்டோவுக்கு ஐபிஎல்-ல் அனுமதி மறுப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ தவறவிடுகிறார். 33 வயதான ஜானி பேர்ஸ்டோ கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காயம் அடைந்தார். இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், பல்வேறு தொடர்களில் விளையாடவில்லை.

வரும் 31ம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரில் ஜானி பேர்ஸ்டோ கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஜானி பேர்ஸ்டோவுக்கு, தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in