

நடுவரின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் டிஆர்எஸ் முறையை அனைத்து சர்வதேச டி 20 போட்டிகளிலும் அமல்படுத்த வேண்டும் என அனில் கும்ப்ளே தலைமையிலான ஐசிசி தொழில்நுட்பக் குழு பரிந்துரை செய்துள்ளது.
ஐசிசி தொழில்நுட்பக் குழுவின் வருடாந்திர கூட்டம் லண்டனில் கடந்த இரு தினங்கள் நடை பெற்றது. இதில் டி 20 போட்டிகளில் டிஆர்எஸ் முறையை அமல்படுத்த வேண்டும், ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டியை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், களத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் வீரரை மைதானத்தில் இருந்து வெளியேற்றும் அதிகாரம் நடுவருக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகள் முன் வைக்கப்பட்டன.
மேலும் டிஆர்எஸ் முறைப்படி களநடுவரின் முடிவு சரியாக அமைந்தால் ரிவ்யூ வாய்ப்பு இழக்கக்கூடாது, பேட்டின் விளிம்பு களின் தடிமனுக்கு கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டும், போட்டி யின்போது வீரருக்கு தலையில் அடிபட்டு விளையாட முடியாத நிலை ஏற்பட்டால் அவருக்கு பதி லாக மாற்று வீரரை களமிறக்க அனுமதி வழங்க வேண்டும் (2 ஆண்டுகளுக்கு பரிட்சார்த்த முறை) எனவும் பரிந்துகைகள் முன்மொழியப்பட்டுள்ளன.
கும்ப்ளே கூறும்போது, “கடந்த இரு தினங்களாக கிரிக்கெட் தொடர்பான விஷயங்களை அருமையாக விவாதித்தோம். இதில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. முதலாவது சர்வதேச கிரிக் கெட்டின் கட்டமைப்பையும், சர்வதேச விளையாட்டில் உள்ள சூழலையும் கருத்தில் கொண்டு எங்கள் குழு ஒருமனதாக பரிந்துரைகளை வழங்கி உள்ளது.
இரண்டாவது கிரிக்கெட் விதிகளை வகுக்கும் எம்சிசி-யின் அறிவுரைப்படி பேட்டின் தடிமனுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என கூறியுள் ளோம். இது பந்துக்கும் மட்டைக்கும் இடையிலான போட்டியை சமநிலைப்படுத்த உதவும்” என்றார்.
இந்த கூட்டத்தில் தொழில் நுட்பக் குழுவின் உறுப்பினர் களான கிளேர் கானர், ராகுல் திராவிட், அட்ரியன் க்ரிஃபித்ஸ், ஜெயவர்த்தனே, டேவிட் கென்டிக்ஸ், ரிச்சர்டு கெட்டல்பரோ, டேரன் லீமன், ரஞ்ஜன் மதுகலே, டிம் மே, கெவின் ஓ'பிரைன், ஷான் பொலாக், ஜான் ஸ்டீபென்சன், ஆன்ட்ரூ ஸ்ட்ராஸ், டேவிட் ஓயிட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த பரிந்துரைகளை ஐசிசி தலைமை செயல் அதிகாரிகள் ஏற்றுக்கொண்டால், புதிய விதிமுறைகள் வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் சர்வதேச போடிகளில் அமலாகும்.