காயம் காரணமாக ரஹானே விலகல்: அணியில் மணீஷ் பாண்டே தேர்வு

காயம் காரணமாக ரஹானே விலகல்: அணியில் மணீஷ் பாண்டே தேர்வு
Updated on
1 min read

விரல் காயம் காரணமாக அஜிங்கிய ரஹானே இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். இவருக்குப் பதிலாக மணீஷ் பாண்டே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதே போல் வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஷமி ஆடுவதும் உறுதியாக தெரியாத நிலையில் அவருக்குப் பதிலாக மும்பை வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மணீஷ் பாண்டே சேர்க்கப்பட்டாலும் ரஹானேவுக்குப் பதில் கருண் நாயர் விளையாடும் 11 வீரர்களில் இடம்பெறலாம் என்றும் ஷமி ஆட முடியாது போனால் அவருக்குப் பதிலாக புவனேஷ் குமார் முதல் தெரிவு என்றும் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மும்பை டெஸ்ட் போட்டியை முன்னிட்டு நடைபெற்ற பயிற்சியில் பந்து பட்டு வலது கை ஆட்காட்டி விரலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டதால் ரஹானே இங்கிலாந்துக்கு எதிராக மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் விலக்கிக் கொள்ளப்பட்டதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

அதே போல் ஷமி ஆடுவது பற்றிய முடிவு ஆட்டம் தொடங்கு முன்பு முடிவெடுக்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in