‘அழகிய தமிழ் மகன்’ - வெள்ளை வேட்டி, சட்டையில் ஜடேஜா... ரியாக்ட் செய்த ரசிகர்கள்!

ரவீந்திர ஜடேஜா
ரவீந்திர ஜடேஜா
Updated on
1 min read

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா வெண்ணிற வேட்டி மற்றும் சட்டை அணிந்துள்ள போட்டோ சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது. அதற்கு ரசிகர்கள் தங்கள் ரியாக்‌ஷனையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

34 வயதான ஜடேஜா சர்வதேச கிரிக்கெட்டில் முன்னணி ஆல்-ரவுண்டர்களில் ஒருவர். கடந்த சில மாத காலமாக காயத்தால் அவரை கிரிக்கெட் களத்தில் பார்க்க முடியவில்லை. இவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில் இந்த போட்டோ பகிரப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை முதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பகிர்ந்தது. தொடர்ந்து அதனை ஜடேஜாவும் ஷேர் செய்திருந்தார். கடந்த ஐபிஎல் சீசனில் அணி நிர்வாகம் மற்றும் ஜடேஜா இடையே மனக்கசப்பு இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், இப்போது அவர் சென்னை அணியால் தக்கவைக்கப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் இந்தப் படம் வெளியாகி உள்ளது. ‘அழகிய தமிழ் மகன்’ என்ற கேப்ஷனுடன் இதனை சிஎஸ்கே அணி சமூக வலைதளத்தில் ஷேர் செய்துள்ளது.

ஜடேஜாவுக்கு விசில் போடு, செம மாஸா இருக்கு, கொஞ்சம் ஓவரா சமாதானம் ஆயிட்டாங்க போல, அவர் தமிழரே இல்லை என ரசிகர்கள் தங்கள் கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in