

இந்திய கிரிக்கெட் அணியின் மேட்ச் வின்னர், அசத்தல் ஆல்-ரவுண்டர், அற்புத ஃபீல்டர் என முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கை சொல்லலாம். டி20 உலகக் கோப்பை, ஒருநாள் உலகக் கோப்பை, அண்டர் 19 உலகக் கோப்பை தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில் சிறப்பான பங்களிப்பை கொடுத்தவர். இன்று அவருக்கு பிறந்தநாள்.
21-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய அணியில் அறிமுக வீரராக களம் கண்டார். இவர் களத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் போராட்ட குணம் கொண்டவர். புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீண்ட பிறகு கிரிக்கெட் களத்திற்கு கம்பேக் கொடுத்து கர்ஜித்த சிங்கம் 'யுவி' என்பது அதற்கு உதாரணம்.
இடது கை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக சர்வதேச கிரிக்கெட் களத்தில் கலக்கியவர். விக்கெட் டேக்கிங் பவுலரும் கூட. முக்கியமாக இந்திய அணியின் ஃபீல்டிங் தரத்தை அடுத்த தரத்திற்கு கொண்டு சென்ற வீரர்களில் இவரும் ஒருவர். ஆக்ரோஷமாக ஆடும் வீரர். சுழற்பந்து வீச்சை காட்டிலும் வேகப்பந்து வீச்சை கூலாக எதிர்கொண்டு ஆடுவார். 6.1 அடி உயரம் கொண்ட இவர் வானுயர பறக்கும் சிக்ஸர்களை விளாசுவதில் வல்லவர்.
அவரது சாதனை துளிகள் சில...