Published : 29 Sep 2022 05:35 AM
Last Updated : 29 Sep 2022 05:35 AM

கால்பந்தில் ஓமனை வீழ்த்தியது இந்தியா

புதுடெல்லி: 17 வயதுக்கு உட்பட்டோருக்கான நட்புரீதியிலான கால்பந்து போட்டியில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஓமனை வீழ்த்தியது.

மஸ்கட்டில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 10-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை காங்டே கோலாக மாற்றினார். அடுத்த 8-வது நிமிடத்தில் தோக்ச்சோம் கோல் அடித்து அசத்த முதல் பாதியில் இளம் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

69-வது நிமிடத்தில் லால்பெகுலா, பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார். இதனால் இளம் இந்திய அணி வலுவான முன்னிலை பெற்றது. ஆட்டம் முடிவடைய 2 நிமிடங்கள் எஞ்சியிருந்த நிலையில் ஓமன் அணியின் அல்ஹைதம் அல்ஷுகைலி கோல் அடித்தார். முடிவில் இளம் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x