ஹைதராபாத் அணிக்கு எதிராக டெல்லி போராடி தோல்வி

ஹைதராபாத் அணிக்கு எதிராக டெல்லி போராடி தோல்வி
Updated on
1 min read

டெல்லி டேர்டெவில்ஸ், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில், ஹைதராபாத் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

185 என்ற கடின இலக்கை விரட்டிய டெல்லி அணியின் துவக்க வீரர்கள் விஜய் மற்றும் டி காக், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்களது ஆட்டத்தால் 11 ஒவர்களில் டெல்லி 98 ரன்களை வேகமாக எட்டியது.

ஆனால் 12-வது ஓவரில் 30 பந்துகளில் 48 ரன்கள் எடித்திருந்த டி காக் ஆட்டமிழக்க, அடுத்த ஓவரிலேயே 40 பந்துகளில் 52 ரன்கள் எடுத்திருந்த விஜய்யும் வெளியேறினார்.

தொடர்ந்து ஜோடி சேர்ந்த கேப்டன் பீட்டர்சன் மற்றும் கார்த்திக் ஜோடி, அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்ல முயன்றனர். 4 ஓவர்களில் 56 ரன்கள் தேவை என்ற நிலையில் டேல் ஸ்டெய்ன் வீசிய 17-வது ஓவரில் கார்த்திக் 15 ரன்களுக்கும், பீட்டர்சன் 16 ரன்களுக்கும் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்தனர்.

அடுத்து களத்தில் இருந்த திவாரி, டுமினி ஜோடி 17 மற்றும் 18-வது ஓவர்களில் 29 ரன்களைக் குவிக்க, கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 20 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரில் 15 ரன்களை மட்டுமே அந்த அணியால் எடுக்க முடிந்தது. இதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றது.

முன்னதாக டாஸ் வென்று ஆடிய ஹைதராபாத் அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 20 ஓவரில் 184 ரன்களைக் குவித்தது. அந்த அணியின் ஃபின்ச் 53 பந்துகளில் 88 ரன்களும், வார்னர் 45 பந்துகளில் 58 ரன்களும் எடுத்து, அணியை வலுவான நிலைக்கு எடுத்துச் சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in