பி.வி.சிந்துக்கு உற்சாக வரவேற்பு

பி.வி.சிந்துக்கு உற்சாக வரவேற்பு
Updated on
1 min read

ஹைதராபாத்: இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டில் மகளிர் ஒற்றையர் பிரிவு பாட்மிண்டனில் இந்தியாவின் பி.வி.சிந்து தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

இதேபோன்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் கிடாம்பி காந்த் வெண்கலப் பதக்கமும், ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி தங்கப் பதக்கமும் வென்றிருந்தது. இவர்கள் அனைவரும் நேற்று விமானம் மூலம் ஹைதராபாத் வந்தடைந்தனர். பதக்கம் வென்று திரும்பிய இவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பி.வி.சிந்துவின் தந்தை ரமணா கூறும்போது, “சிந்து தங்கப்பதக்கம் வென்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. காமன்வெல்த் விளையாட்டு பாட்மிண்டனில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதன்முறை” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in