

31 வயதான இந்திய வீராங்கனையான ஹரிகா, கடந்த பல ஆண்டுகளாக செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய மகளிர் அணியின் முதுகெலும்பாக உள்ளார். அவருக்கு இது 8-வது ஒலிம்பியாட் போட்டியாகும்.
2004ம் ஆண்டு அறிமுகமான அவர், தொடர்ச்சியாக 8 ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்ற வீராங்கனை என்ற சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார்.
எல்லாவற்றுக்கும் மேலாக நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஹரிகா இன்னும் 2 வார காலத்தில் குழந்தை பெற்றெடுக்க உள்ளார். இந்த சூழ்நிலையிலும் அவர், இந்திய அணிக்காக ஒலிம்பியாட் போட்டியில் விளையாடுகிறார்.
ஹரிகா கூறும்போது, “இம்முறை நாங்கள் பட்டம் வெல்ல வாய்ப்பு இருக்கிறது என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் எங்கள் மீது எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.
நிச்சயமாக, நாங்கள் போட்டித் தரவரிசையில் முதலிடம் வகிக்கிறோம், ஆனால் போட்டி நடைபெறும் நாளின் முடிவில், நாம் எப்படி கூட்டாகச் செயல்படுகிறோம் என்பது முக்கியம். எங்கள்திறனுக்கு மேல்செயல்பட நாங்கள்ஆர்வமாக இருக்கிறோம் என்பதை உறுதியாக நம்புகிறேன்” என்றார்.