Published : 28 Jul 2022 09:50 PM
Last Updated : 28 Jul 2022 09:50 PM

காமன்வெல்த் போட்டிகள் 2022 | ஜூலை 29: களம் காணும் இந்திய வீரர்களின் விவரம்

இந்திய மகளிர் ஹாக்கி அணி.

பர்மிங்காம்: நாளை ஜூலை 29 அன்று இந்திய அணி சார்பில் பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் குழுவாகவும், தனியாகவும் களம் காண உள்ளனர் இந்திய வீரர்களும், வீராங்கனைகளும். அது குறித்த விவரத்தை விரிவாக பார்க்கலாம்.

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஆரம்பமாகவுள்ளது. இந்தியா உட்பட சுமார் 72 காமன்வெல்த் நாடுகளின் வீரர்களும், வீராங்கனைகளும் இதில் பங்கேற்பார்கள். இன்று (ஜூலை 28) முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரையில் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது.

தொடக்க விழாவில் பேட்மிண்டன் வீராங்கனை மூவர்ண கொடியை ஏந்தி அணியை வழிநடத்துகிறார். இந்நிலையில், நாளை நடைபெற உள்ள பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் களம் காண உள்ள இந்திய வீரர்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

  • டி20 கிரிக்கெட்: இந்தியா VS ஆஸ்திரேலியா (மகளிர்) - குரூப் ஏ: மதியம் 03.30
  • பேட்மிண்டன் - குழு ஆட்டம்: இந்தியா VS பாகிஸ்தான் - குரூப் ஏ: மாலை 06.30
  • மகளிர் ஹாக்கி: இந்தியா VS கானா - மாலை 06.30
  • குத்துச்சண்டை: ஆடவர் 63 கிலோ பிரிவு - ஷிவா தாபா VS பாகிஸ்தான் வீரர் சுலேமான் - ரவுண்ட் ஆப் 32: மாலை 05.00
  • டேபிள் டென்னிஸ் - மகளிர் அணி: இந்தியா VS தென்னாப்பிரிக்கா & பிஜி: மதியம் 02:00 மற்றும் மாலை 08.30
  • டேபிள் டென்னிஸ் - ஆடவர் அணி: இந்தியா VS பார்பாடஸ் & சிங்கப்பூர்: மாலை 04.30 & 11.00
  • ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்: மாலை 04.30
  • நீச்சல்: ஆடவர் 400 மீட்டர் ஃப்ரீஸ்டைல் - குஷாகிரா ராவத்: மதியம் 03.11
  • நீச்சல்: ஆடவர் 50 மீட்டர் ஃப்ரீஸ்டைல் - சஜன் பிரகாஷ்: மாலை 04.03
  • நீச்சல்: ஆடவர் 100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் - ஸ்ரீஹரி நட்ராஜ்: மாலை 04.26
  • இதுதவிர நீச்சலில் பேக்ஸ்ட்ரோக், ஸ்குவாஷ் ஆடவர் மற்றும் மகளிர், சைக்கிளிங், லான் பவுல்ஸ், டிரையத்லான் போன்ற விளையாட்டுகளில் இந்தியா வீரர்கள் விளையாடுகிறார்கள்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x