Published : 28 Jul 2022 04:02 PM
Last Updated : 28 Jul 2022 04:02 PM

செஸ் ஒலிம்பியாட் 2022 | இந்திய ‘ ராஜா ராணிகள் ’

விதித் குஜராத்தி

ரேட்டிங்: 2714; தரவரிசை: 28
சிறப்பு: இந்தியாவின் 30-ஆவது கிராண்ட்ஸ்மாஸ்டர். 2020 ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற அணியில்இடம் பெற்றிருந்தார்.

பென்டாலா ஹரிகிருஷ்ணா:

ரேட்டிங்: 2720; தரவரிசை: 25
சிறப்பு: இளவயதில்கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றார். 7 ஒலிம்பியாட் போட்டிகளில்பங்கேற்ற அனுபவம் கொண்டவர். காமன்வெல்த், ஆசிய, உலக ஜூனியர் சாம்பியன்.

கிருஷ்ணன் சசிகிரண்:

ரேட்டிங்: 2638 ; தரவரிசை: 76
சிறப்பு: 2014 ஒலிம்பியாட்டில் தனிநபர் வெள்ளி, அணிப் பிரிவில் வெண்கலம், 2006-ஆசியப்போட்டியில் தங்கம் வென்றவர். காமன்வெல்த்சாம்பியன்.

அர்ஜுன் எரிகைசி:

ரேட்டிங்: 2689 ; தரவரிசை: 44
சிறப்பு: நடப்பு தேசியசாம்பியன், 14 வயதில் இந்தியாவின் 54-வது கிராண்ட்மாஸ்டர்

எஸ்.எல்.நாராயணன்:

ரேட்டிங்: 2659; தரவரிசை: 89
சிறப்பு: இந்தியாவின் 41-வது கிராண்ட்மாஸ்டர்ர். 16 வயதில் காமன்வெல்த் சாம்பியன்.

சூர்யா சேகர் கங்குலி:

ரேட்டிங்: 2608; தரவரிசை: 196
சிறப்பு: 2003-ல் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்து.

எஸ் பி சேதுராமன்:

ரேட்டிங்: 2623 ; தரவரிசை: 153
சிறப்பு: 2011-ல் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்து.

அபிஜீத் குப்தா:

ரேட்டிங்: 2627 ; தரவரிசை: 146
சிறப்பு: 2008-ல் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்து.

கார்த்திகேயன் முரளி:

ரேட்டிங்: 2613 ; தரவரிசை: 178
சிறப்பு: 2015-ல் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்து.

அபிமன்யு பூராணிக்:

ரேட்டிங்: 2612 ; தரவரிசை: 182
சிறப்பு: 2017-ல் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்து.

நிஹால் சரின்:

ரேட்டிங்: 2600; தரவரிசை: 99
சிறப்பு: 2020ம் ஆண்டு செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற வீரர். 14 வயதில்கிராண்ட்மாஸ்டர்.

டி.குகேஷ்:

ரேட்டிங்: 2684 ; தரவரிசை: 54
சிறப்பு: செஸ் வரலாற்றில் 12 வயதில்கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்ற 2-வது வீரர். ஆசிய இளையோர்போட்டியில் 5 தங்கம் வென்றுள்ளார்.

பி. அதிபன்:

ரேட்டிங்: 2598 ; தரவரிசை: 38
சிறப்பு: 2014 ஒலிம்பியாட்டில் வெண்கலம்வென்றவர். ஆசியசாம்பியன், ஆக்ரோஷமாக விளையாடுவதால் பீஸ்ட் என்றசிறப்புப் பெயருடன் அழைக்கப்படுகிறார்.

ஆர். பிரக்ஞானந்தா:

ரேட்டிங்: 2648 ; தரவரிசை: 107
சிறப்பு: 10 வயதில்சர்வதேச மாஸ்டர், உலகசாம்பியன் மேக்னஸ்கார்ல்சனை இரண்டுமுறை வீழ்த்தியவர்.

ரவுனக் சத்வானி:

ரேட்டிங்: 2611; தரவரிசை: 185
சிறப்பு: 4-வது இளம்இந்திய கிராண்ட் மாஸ்டர், காமன்வெல்த் சாம்பியன்.

கொனேரு ஹம்பி:

ரேட்டிங்: 2600; தரவரிசை: 3
சிறப்பு: 15 வயதில்கிராண்ட்மாஸ்டர்,
2020 ஒலிம்பியாடில் தங்கம்.

ஆர்.வைஷாலி:

ரேட்டிங்: 2442; தரவரிசை: 29
சிறப்பு: 2020 ஒலிம்பியாட்டில் தங்கம்,
12, 14 வயதில் உலக சாம்பியன்.

தானியா சச்தேவ்:

ரேட்டிங்: 2399; தரவரிசை: 50
சிறப்பு: ஒலிம்பியாட்டில் தனிநபர் வெண்கலம், 3 முறைகாமன்வெல்த் சாம்பியன்.

பக்தி குல்கர்கனி:

ரேட்டிங்:2372 ;
தரவரிசை: 82 சிறப்பு: ஆசிய சாம்பியன்

வந்திகா அகர்வால்:

ரேட்டிங்: 2371 தரவரிசை:89
சிறப்பு: 2020 ஒலிம்பியாட்டில் தங்கம், 2021-ல் கிராண்ட்மாஸ்டர்.

எஸ். சவுமியா:

ரேட்டிங்: 2335 ; தரவரிசை: 126
சிறப்பு: உலக ஜூனியர், காமன்வெல்த் சாம்பியன்.

மேரி அன் கோம்ஸ்:

ரேட்டிங்: 2324 ; தரவரிசை: 142
சிறப்பு: 2008 ஒலிம்பியாட்டில் வெள்ளி, 3 முறை ஆசியஜூனியர் சாம்பியன்.

பத்மினி ரவுத்: ரேட்டிங்:

2374 ; தரவரிசை: 77
சிறப்பு: 2014 ஒலிம்பியாட்டில் தனிநபர் தங்கம், காமன்வெல்த் ஆசிய சாம்பியன்.

திவ்யா தேஷ்முக்:

ரேட்டிங்: 2319 ;
தரவரிசை: 149
சிறப்பு: 2020 ஒலிம்பியாட்டில் தங்கம், நடப்பு தேசியசாம்பியன்.

ஈஷா கர்வடே:

ரேட்டிங்: 2339 ; தரவரிசை: 93
சிறப்பு: காமன்வெல்த் சாம்பியன், ஆசிய செஸ் சாம்பியன்ஷிப்பில் வெண்கலம்.

சாஹிதி வர்ஷினி: ரேட்டிங்: 2312; தரவரிசை: 3958
சிறப்பு: 2022-ல் மகளிர் சர்வதேச மாஸ்டர் அந்தஸ்து.

பிரத்யுஷா போடா:

ரேட்டிங்: 2310; தரவரிசை: 4018
சிறப்பு: 2020-ல் மகளிர் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்து.

பி வி நந்திதா :

ரேட்டிங்: 2312; தரவரிசை: 3957
சிறப்பு: 2020-ல் மகளிர் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்து.

விஷ்வா வஸ்னாவாலா:

ரேட்டிங்: 2305; தரவரிசை: 4177
சிறப்பு: 2022-ல் மகளிர் சர்வதேச மாஸ்டர் அந்தஸ்து.

சகோதர, சகோதரி

செஸ் ஒலிம்பியாட்டில் ஒரே தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்கும் 2-வது சகோதர, சகோதரி என்ற பெருமையை பிரக்ஞானந்தாவும், வைஷாலியும் பெற்றுள்ளனர்.

இந்த வகையில் கடந்த 1988-ம் ஆண்டு கிரீஸ் நாட்டில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா சார்பில் என்.சரிதாவும் அவரது சகோதரர் என்.சுதாகர் பாபுவும் பங்கேற்றிருந்தனர்.

“இந்தியாவின் முதல் இரு அணிகளிலும் மிக வலுவான, ஈர்க்கக்கூடிய வீரர்களை கொண்டுள்ளது. இரு அணிகளுமே பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளதாகவே கருதுகிறேன்’’

- உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x