இந்திய அணிக்கு பயிற்சியாளராக டேனியல் வெட்டோரியை அணுகிய விராட் கோலி

இந்திய அணிக்கு பயிற்சியாளராக டேனியல் வெட்டோரியை அணுகிய விராட் கோலி
Updated on
1 min read

இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக வர நியூஸிலாந்து முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரியை இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராட் கோலி அணுகியுள்ளார்.

இந்த வாரத்தின் தொடக்கத்தில் விராட் கோலி இது தொடர்பாக டேனியல் வெட்டோரியை அணுகியதாக தெரியவந்தது. தற்போது விராட் கோலி ஆங்கில ஊடகம் ஒன்றில் தான் வெட்டோரியை அணுகியதாக ஒப்புக் கொண்டார்.

இது குறித்து விராட் கோலி கூறும்போது, “இதனை நான் ஒரு பெரிய சர்ச்சையாகவே பார்க்கவில்லை. பயிற்சியாளர் ஒருவர் எப்படியிருந்தாலும் நியமிக்கப்பட்டாக வேண்டும். நான் வெட்டோரியிடம் சில காலம் முன்பு பேசினேன், அது எப்படி இப்போது வெளியானது என்று தெரியவில்லை.

அவர் மட்டுமல்ல வேறு சிலருடனும் நாங்கள் கலந்தாலோசித்தோம், இதுவும் அனைவருக்கும் தெரியும்.” என்றார்.

ஆனால் இந்த மற்ற நபர்கள் யார் என்பதை கோலி கூறவில்லை.

ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் பயிற்சியாளரான டேனியல் வெட்டோரி, பிக்பாஷ் லீகில் பிரிஸ்பன் ஹீட்டர்ஸ் அணிக்கு பயிற்சியாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெட்டோரிக்கு ‘திங்கிங் கிரிக்கெட்டர்’ என்ற பெயர் கிரிக்கெட் வட்டாரங்களில் உண்டு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in