9 ஓவரில் 82 ரன்கள் முதல் 10 ஓவரில் 2 விக். உடன் 22 ரன்கள் வரை: பாடம் கற்ற அன்ஷுல் காம்போஜ்!

9 ஓவரில் 82 ரன்கள் முதல் 10 ஓவரில் 2 விக். உடன் 22 ரன்கள் வரை: பாடம் கற்ற அன்ஷுல் காம்போஜ்!
Updated on: 
1 min read

தனது முதல் ஒருநாள் சர்வதேச அறிமுகப் போட்டியில், சமீபத்தில் மே.இ.தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரின் 3-வது போட்டியில் சண்டிகரில் அன்ஷுல் காம்போஜ் 9 ஓவர்கள் வீசி 82 ரன்களைக் கொடுத்து செம சாத்து வாங்கி விக்கெட்டுகள் ஒன்றைக் கூட கைப்பற்ற முடியாமல் முடிந்தார். ஆனால் அதன்பிறகு நேற்று 2வது ஒரு நாள் போட்டியை நியூஸிலாந்துக்கு எதிராக ஆடிய காம்போஜ் நேற்று ஆக்லாந்தில் 10 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகளை வெறும் 22 ரன்களுக்குக் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றுள்ளார்.

இந்த திருப்பு முனை பந்துவீச்சு அல்லது மீட்டெழுச்சிக்குக் காரணம் என்ன என்பதை அவரே விளக்குகிறார். “ஒரு மோசமான போட்டி ஒரு வீரரின் வாழ்க்கையைத் தீர்மானித்து விடாது. மாறாக, அது எனக்கு அகத் தூண்டுதலைத்தான் கொடுத்தது. நான் எப்போதும் எப்படி என்னை பந்துவீச்சில் மேம்படுத்திக் கொள்வது என்பதில்தான் கவனம் செலுத்துவேன், வெளியில் என்ன பேசுகிறார்கள் என்பதில் என் கவனம் செல்லாது” என்றார்.

ஆனால், நம் கண்ணோட்டத்தின்படி அறிமுகப் போட்டியில் ஆடிய நியு சண்டிகர் மைதானம் ஒரு ‘பேட்டிங் பாரடைஸ்’, அங்கு பவுலர்கள் குழிதோண்டிப் புதைக்கப்படுவார்கள். ஆனால் ஆக்லாந்து பிட்ச் வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமானது, அதில் இவர் வீசியது என்பது புரியக்கூடியதே.

முதல் போட்டிக்கும் இந்தப் போட்டிக்கும் இடையே என்ன நடந்தது என்பதை அவர் மேலும் விளக்கும்போது, “கிரிக்கெட்டில் எப்போதும் முடிவுகளை விட அந்த புரோசஸ் தான் முக்கியம், என்னால் சரியான இடத்தில் பந்தைப் பிட்ச் செய்வதை சரிவர செயல்படுத்த முடிந்தால் ரன்கள் போவது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை ஏனெனில் நல்ல இடங்களில் நல்ல லெந்தில் கடினமான லெந்தில் வீசும்போது எப்போதும் ரன்கள் அடித்து விட முடியாது. ஆகவே நான் யார்க்கர் வீச வேண்டுமென்று நினைத்தால் அதை மிகத் துல்லியமாக வீச வேண்டும், அப்படி நினைத்ததைச் செயல்படுத்த முடிந்தால் சக்சஸ் தானாக வரும். என்றுதான் எனக்கு அறிவுறுத்தினர். அதைத்தான் செய்தேன்” என்றார்.

நேற்று அவர் 22 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை 10 ஓவர்களில் கைப்பற்றியது, 2003-ல் ஜவகல் ஸ்ரீநாத் 13 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஒருநாள் போட்டி ஸ்பெல்லுக்கு அடுத்தபடியான பிரமாதமான பவுலிங் ஆகும்.

9 ஓவரில் 82 ரன்கள் முதல் 10 ஓவரில் 2 விக். உடன் 22 ரன்கள் வரை: பாடம் கற்ற அன்ஷுல் காம்போஜ்!
ட்ரம்ப்பின் தேர்தல் வீழ்ச்சியும், சர்வதேச அரசியல் தாக்கமும் - ஒரு தெளிவுப் பார்வை

X