

பாரீஸ்: உலகக் கோப்பை வில்வித்தையில் இந்தியாவின் அபிஷேக் வர்மா, ஜோதி சுரேகா ஜோடி தங்கப் பதக்கம் வென்றது.
உலகக் கோப்பை வில்வித்தை ஸ்டேஜ் 3 தொடர் பிரான்ஸின் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவு இறுதி சுற்றில் இந்தியாவின் அபிஷேக் வர்மா, ஜோதி சுரேகா ஜோடி பிரான்ஸின் ஜீன் போல்ச், சோஃபி டோடெமன் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் அபிஷேக், ஜோதி ஜோடி 152-149 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றது. உலகக் கோப்பை தொடரில் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா வெல்லும் முதல் தங்கப் பதக்கம் இதுவாகும்.
மகளிருக்கான ரீகர்வ் அணிகள் பிரிவில் தீபிகா குமாரி, அங்கிதா பகத், சிம்ரன்ஜீத் கவுர் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி தங்கப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இன்று சீன தைபே அணியை எதிர்த்து விளையாட உள்ளது.