

அர்ஜூனா விருதுக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ரிது ராணியின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி வரும் ரிது ராணி, 36 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெறச் செய்தவர்.
சிறந்த வீரர்களுக்கான அர்ஜூனா விருதுக்கு இந்திய ஆடவர் ஹாக்கி அணி வீரர்கள் ரகுநாத், தரம்வீர் சிங் ஆகியோ ரது பெயர்கள் பரிந்துரை செய் யப்பட்டுள்ளது. கடந்த 2005-ல் பாகிஸ்தானுக்கு எதிரான போட் டியின் மூலம் அறிமுகமான ரகுநாத் 2007 அஸ்லான் ஷா கோப்பைபில் வெண்கல பதக்கம், ஆசிய கோப்பைகளில் 2007ல் தங்கம், 2008ல் வெள்ளி, 2013ல் வெள்ளி பதக்கங்கள் வெல்ல முக்கிய காரணமாக விளங்கி னார். 2010 ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலம், 2014ல் தங்கம், காமன்வெல்த் போட்டியில் 2014ல் வெள்ளி, அஸ்லான் ஷா கோப்பையில் 2014ல் வெண்கல பதக்கம் பெற் றதில் தரம்வீரர் சிங் முக்கிய பங்காற்றினார்.
மேஜர் தயான் சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு முன்னாள் வீரர் டங் டங் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கடந்த 1980ல் மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய அணியில் டங் டங் இடம் பெற்றிருந்தார்.
சிறந்த பயிற்சியாளருக்கான துரோனாச்சாரியா விருதுக்கு சி.ஆர்.குமார் பரிந்துரைக்கப் பட்டுள்ளார்.