Published : 01 Jun 2022 07:31 AM
Last Updated : 01 Jun 2022 07:31 AM
ஜகார்த்தா: ஆடவருக்கான ஆசிய கோப்பை ஹாக்கியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இந்திய அணி இழந்தது.
இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் நேற்று இந்தியா – தென்கொரியா மோதின. இந்த ஆட்டம் 4-4 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. இந்திய அணி தரப்பில் நிலம் சஞ்ஜீப், மணீந்தர் சிங், சேஷே கவுடா, மாரீஸ்வரன் தலா ஒரு கோல் அடித்தனர்.
சூப்பர் 4 சுற்றின் முடிவில் மலேசியா, தென் கொரியா, இந்தியா ஆகிய 3 அணிகளும் தலா 5 புள்ளிகள் பெற்றிருந்தன. எனினும் கோல்கள் வித்தியாசத்தின் அடிப்படையில் மலேசியா, தென் கொரியா அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இந்திய அணியின் கோல் வித்தியாசம் (1) ஆக இருந்தது. அதேவேளையில் தென்கொரியா (2), மலேசியா (5) கோல் வித்தியாசங்களை கொண்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT