விராட் கோலிக்கு கேல் ரத்னா விருது: மத்திய அரசுக்கு பிசிசிஐ பரிந்துரை

விராட் கோலிக்கு கேல் ரத்னா விருது: மத்திய அரசுக்கு பிசிசிஐ பரிந்துரை
Updated on
1 min read

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பரிந்துரை செய்துள்ளது. அஜிங்க்ய ரஹானேவுக்கு அர்ஜுனா விருது வழங்கவும் பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி கவுர வித்து வருகிறது. இதற்காக சிறந்த விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டில் தொடர்புடை யவர்கள் தேர்வு செய்யப்பட்டு விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்யப்படுவார்கள். அதன்படி இந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை விராட் கோலிக்கு வழங்க மத்திய அரசுக்கு பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது. டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் அவர் செய்த சாதனைகளை கருத்தில் கொண்டு இந்த விருதுக்கு அவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

கேல் ரத்னா விருது பெறும் வீரருக்கு, அந்த விருதுடன், சான்றிதழும் ரூ.7.5 லட்சம் பரிசும் வழங்கப்படும். இந்த விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டால் இதைப் பெறும் 3-வது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார். இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர், தோனி ஆகியோர் இந்த விருதை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான அர்ஜுனா விருதை இந்த ஆண்டு அஜிங்க்ய ரஹானேவுக்கு வழங்கவும் பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது.

பிசிசிஐ-யின் பரிந்துரைகளை விருதுக்கான தேர்வுக்குழுவினர் பரிசீலித்து வருவதாக விளை யாட்டுத்துறை அமைச்சரகம் கூறியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in