புனே அணியில் இருந்து மார்ஷ் விலகல்

புனே அணியில் இருந்து மார்ஷ் விலகல்
Updated on
1 min read

ஐபிஎல் தொடரில் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் அணியில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் விலகியுள்ளார். வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இந்தத் தொடரில் இருந்து விலகி யிருப்பதாக கிரிக்கெட் ஆஸ்தி ரேலியாவின் மருத்துவ மேலாளர் அலெக்ஸ் கோண்டோரியஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. புனே அணிக்காக இந்த தொடரில் 3 போட்டிகளில் ஆடிய மார்ஷ், 4 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

புனே அணியில் இருந்து ஏற்கெனவே கெவின் பீட்டர்சன், டூபிளெஸ்ஸி ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பீட்டர்சனுக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் ஹவாஜா புனே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இன்னும் இரண்டு வீரர்கள் புனே அணியில் விரைவில் சேர்க்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in