

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தாமிகா பிரசாத் காயம் அடைந்துள்ளதால் இங்கிலாந்துக்கு எதிராக ஹெட்டிங்லியில் வரும் 19-ம் தேதி தொடங்கும் முதல் டெஸ்டில் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு சுற்றுப்பயணத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல தாமிகா பிரசாத் முக்கிய காரணமாக இருந்தார்.
32 வயதான தாமிகா பிரசாத் கடந்த வாரம் எசக்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தின் போது தோள்பட்டையில் காயம் அடைந்தார். தொடர்ந்து அவரது உடல் நிலை பரிசோதிக்கப்பட்டு வரும் நிலையில் 2-வது அல்லது 3-வது டெஸ்டில் தாமிகா பிரசாத் விளையாடக்கூடும் என நம்பிக்கை தெரிவித்தார் அணியின் பயிற்சியாளர் கிரகாம் போர்டு.