IPL2022 | ஏமாற்றிய பேட்ஸ்மேன்கள்... கைகொடுத்த ரியான் பராக் - ஆர்சிபிக்கு 145 ரன்கள் இலக்கு

IPL2022 | ஏமாற்றிய பேட்ஸ்மேன்கள்... கைகொடுத்த ரியான் பராக் - ஆர்சிபிக்கு 145 ரன்கள் இலக்கு
Updated on
1 min read

புனே : பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்களை சேர்த்தது.

ஐபிஎல் 15-வது சீசன் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்றைய 39-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் டாஸ் வென்ற ஆர்சிபி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி ராஜஸ்தான் அணிக்கு ஜோஸ் பட்லர், தேவ்தட் படிக்கல் இணை துவக்கம் கொடுத்தது. இருவரும் ரன்கள் குவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்தது. முதல் ஓவரிலேயே படிக்கல் 7 ரன்களில் வெளியேறினார். 3-வது ஓவரில் 17 ரன்களுடன் அஸ்வினும், 4-வது ஓவரில் 8 ரன்களில் பட்லரும் நடையைக்கட்டினர்.

27 ரன்கள் சேர்த்திருந்த சஞ்சு சாம்சனை 9-வது ஓவரில் வனிந்து ஹசரங்கா போல்டாக்கினார். 10 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 69 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது.

அடுத்தடுத்த வீரர்கள் யாரும் பெரிய அளவில் ரன்களை சேர்க்கவில்லை. டேரில் மிட்செல் 16 ரன்களுடனும், ஹெட்மேயர் 3 ரன்களுடனும், போல்ட் 5 ரன்களுடனும், பிரஷீத் கிருஷ்ணா 2 ரன்களுடனும் வெளியேறினர். இதில் ரியான் ப்ராக் மட்டும் 31 பந்துகளில் 56 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்களை மட்டுமே சேர்த்தது.

முஹம்மத் சிராஜ், ஹேசல்வுட், வனிந்து ஹசரங்கா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஹர்ஷல் படேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in