

தொடையில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் விலகியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் புனே அணிக்காக இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் ஆடிவந்தார். கடந்த வெள்ளிக்கிழமையன்று பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது தொடையில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் அவர் பாதியில் வெளியேறினார். ஸ்கேன் செய்து பார்த்தபோது பீட்டர்சனின் காயம் தீவிரமாகியிருப்பது தெரிந்ததால் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், “காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறுவது வருத்தமாக உள்ளது. அதே நேரத்தில் குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்கவுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நவம்பர் மாதம் வரை ஓய்வெடுக்க உள்ளேன்” என்று கூறியுள்ளார்.