

இந்திய அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்கான இந்திய அணி வரும் 19-ம் தேதி அறிவிக்கப்படுகிறது.
புதுடெல்லியில் டிசம்பர் 19-ம் தேதி (சனிக்கிழமை) இந்திய அணியைத் தேர்வு செய்கிறது சந்தீப் பாட்டீல் தலைமை தேர்வுக்குழு.
ஜனவரி 12-ம் தேதி முதல் இந்தத் தொடர் தொடங்குகிறது. பெர்த், பிரிஸ்பன், மெல்போர்ன், கான்பெரா, சிட்னி ஆகிய மைதானங்களில் 5 ஒருநாள் போட்டிகளும், அடிலெய்ட், மெல்போர்ன், சிட்னி ஆகிய மைதானங்களில் டி20 போட்டிகளும் நடைபெறுகின்றன.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை இழந்துள்ளது. ஆஸ்திரேலிய தொடருக்கு மகேந்திர சிங் தோனியே கேப்டன் பதவியில் நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி ஜனவரி 6-ம் தேதி ஆஸ்திரேலியா செல்கிறது.