சென்னை ஓபன் டிக்கெட் விற்பனை தொடங்கியது: அதிகபட்ச விலை ரூ.5 ஆயிரம்

சென்னை ஓபன் டிக்கெட் விற்பனை தொடங்கியது: அதிகபட்ச விலை ரூ.5 ஆயிரம்
Updated on
1 min read

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகளுக்கான சீசன் டிக்கெட்டுகள் விற்பனை நேற்று ஆன்லைனில் தொடங்கியது.

தெற்கு ஆசியாவில் நடை பெறும் ஒரே ஏடிபி டென்னிஸ் தொடரான சென்னை ஓபன் போட்டி கடந்த 19 ஆண்டுகளாக சென்னை நுங்கம்பாகத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நடை பெற்று வருகிறது.

20-ம் ஆண்டு போட்டிகள் வருகிற ஜனவரி 4 ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிரெஞ்ச் ஓபன் சாம்பியனும் கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்றவருமான ஸ்விட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்கா உள்ளிட்ட பிரபல வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.

இந்நிலையில் இப்போட்டி களுக்கான சீசன் டிக்கெட் விற் பனை நேற்று தொடங்கியது. டிக்கெட்டுகளின் விலை ரூ.5,000, ரூ.3000, ரூ.1500 என நிர்ணயிக்கப் பட்டுள்ளது. www.bookmyshow.com என்ற இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். மொத்தமாக டிக்கெட் வேண்டுபவர்கள் >www.aircelchennaiopen.org என்ற முகவரிக்கு சென்று விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

மேலும் நுங்கம்பாக்கம் மைதானத்தில் 25ம் தேதி முதல் சீசன் டிக்கெட்டுகளை நேரடியாக பெறலாம். தினசரி டிக்கெட் வேண்டும் என்றால் போட்டி தொடங்கும் 24 மணி நேரத்துக்கு முன்னதாக www.bookmyshow.com என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம் என போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in