கெய்லுக்கு மட்டையில் மாட்ட ஆரம்பித்தால் பந்துகள் ஷார்ஜாவிலிருந்து அபுதாபியில் போய் விழும்: யுவராஜ் சிங் கலகல

கெய்லுக்கு மட்டையில் மாட்ட ஆரம்பித்தால் பந்துகள் ஷார்ஜாவிலிருந்து அபுதாபியில் போய் விழும்: யுவராஜ் சிங் கலகல
Updated on
1 min read

பொதுவாக கிறிஸ் கெய்லின் பவர் ஹிட்டிங் நம்மைப் போன்ற கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரிய ஆச்சரியத்தையும் உற்சாகத்தையும் தரும். ஆனால் அந்த உயரிய மட்டத்திலேயே பல வீரர்களே கெய்ல், டிவில்லியர்ஸ் ஷாட்களைக் கண்டு வியந்து போவது உண்மையில் பெரிய விஷயம்தான்.

அன்று ஏபிடி 33 பந்துகளில் 73 ரன்கள் விளாசி அதிசயிக்கச் செய்தார் என்பதை விட நம்ப முடியாமல் செய்து விட்டார். திவேத்தியா கூட காட்ரெலை ஒரே ஓவரில் 5 சிக்ஸ் அடித்து நம்மை வியக்க வைத்தார்.

நேற்று யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல் மிகப்பிரமாதமாக தன் ஆட்டத்தைக் கட்டமைத்தார், முதலில் மெதுவாகத் தொடங்கினார், பிறகு பந்து நன்றாக ஃபுட்பால் சைஸுக்குத் தெரிந்தவுடன் வாஷிங்டன் சுந்தர் ஓவர்களில் 4 சிக்சர்களை விளாசினார். உண்மையில் ஷார்ஜா மைதானம் கெய்லுக்கு போதாது என்று அன்று குறிப்பிட்டோம். அதையேதான் யுவராஜ் சிங் தன் ட்விட்டர் பக்கத்தில் கிறிஸ் கெய்ல் இன்னிங்ஸ் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

“யுனிவர்ஸ் பாஸ், கிறிஸ் கெய்லுக்கு பந்து சரியாக மாட்ட ஆரம்பித்தால் ஷார்ஜாவிலிருந்து அபுதாபியில் போய் பந்துகள் விழும். விரட்டலில் ராகுலும் மயங்க் அகர்வாலும் பெரிய தொடக்கத்தைக் கொடுத்தனர்.

இவர்களே பினிஷ் செய்திருக்க வேண்டும். ஏபி டிவில்லியர்ஸ் தாமதமாகக் களமிறங்கியதைப் பார்த்து ஆச்சரியமடைந்தேன். ” என்று தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார் யுவராஜ் சிங்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in