

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 5-வது நாளான நேற்று மூத்த வீராங்கனை யான கீதா போகத் உள்ளிட்ட 4 இந்திய வீராங்கனைகள் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளி யேறினர்.
மகளிர் 58 கிலோ எடைப் பிரிவு தகுதிச்சுற்றில் 10-0 என்ற புள்ளி கள் கணக்கில் இந்திய வீராங் கனையான கீதா போகத்தை வீழ்த்திய ஜப்பான் வீராங்கனை கோரி இகோ, இறுதிச்சுற்றுக்கு முன்னேறியதால் ரெபிசேஜ் சுற் றில் பங்கேற்கும் வாய்ப்பு கீதா போகத்துக்கு கிடைத்தது. எனினும் ரெபிசேஜ் சுற்றில் 0-10 என்ற புள்ளி கள் கணக்கில் துருக்கி வீராங் கனை எலிப் ஜாலேவிடம் தோற்ற தால் வெண்கலம் வெல்லும் வாய்ப்பை இழந்தார் கீதா போகத்.
மற்றொரு இந்திய வீராங் கனையான அனிதா (63 கிலோ) தகுதிச்சுற்றில் 9-1 என்ற புள்ளிகள் கணக்கில் அஜர்பைஜானின் நடியா முஷ்கா செமென்ட்சோவாவை தோற்கடித்தபோதும், காலிறு திக்கு முந்தைய சுற்றில் 2-5 என்ற புள்ளிகள் கணக்கில் கொலம்பியா வின் சான்ட்ரா விவியானாவிடம் தோல்வி கண்டார்.
இந்தியாவின் லலிதா, நிக்கி ஆகியோரும் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினர்.