இங்கிலாந்துக்கு எதிரான தொடரை பாகிஸ்தான் வெல்லும்: பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் நம்பிக்கை

இங்கிலாந்துக்கு எதிரான தொடரை பாகிஸ்தான் வெல்லும்: பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் நம்பிக்கை
Updated on
1 min read

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் வெற்றி பெறும் என அதன் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர் மட்டுமின்றி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மீதும் தீவிர கவனம் செலுத்தியுள்ளோம். அந்த டெஸ்ட் தொடர் எங்களுக்கு மிக முக்கியமான தொடராகும். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடியதைப் போன்று இங்கிலாந்துக்கு எதிராகவும் பாகிஸ்தான் அணி விளையாடி வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன்.

ஆஸ்திரேலியா மற்றும் நியூஸி லாந்துக்கு எதிராக ஆடியதைப் போன்று இங்கிலாந்துக்கு எதிரா கவும் ஆடினால் நிச்சயம் தொடரை வெல்ல முடியும் என்பதில் மிகுந்த நம்பிக்கையோடு இருக் கிறேன்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள மைதானங்கள் எங்கள் வீரர்களுக்கு பழக்கப்பட்டவை யாகும். யூனிஸ்கான், மிஸ்பா உல் ஹக், அசார் அலி ஆகியோர் டெஸ்ட் போட்டியில் அடித்துள்ள சதங்களை கணக்கிட்டால் எங்கள் அணி சிறப்பாக ஆடும் என நினைக்கிறேன் என்றார்.

2012-ல் இதே எமிரேட்ஸில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் வென்றது.

அப்போது சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் பாகிஸ்தானின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தார். ஆனால் இந்த முறை அவர் இடம்பெறவில்லை.

அது குறித்துப் பேசிய வக்கார் யூனிஸ், “அதனால் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எங்கள் அணியில் தற்போது இடம்பெற்றுள்ள சுழற்பந்து வீச்சாளர்களான யாசிர் ஷா, ஜல்பிகர் பாபர் ஆகியோர் சமீபகாலமாக சிறப்பாக ஆடி யிருக்கிறார்கள்.

அவர்கள் இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் சிறப்பாக செயல்படுவார்கள் என நம்பு கிறோம். அவர்கள் இங்கிலாந் துக்கு எதிராக ஆடிய அனுபவம் கொண்டவர்கள்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in