

ஆகஸ்ட் 13 உலக லெஃப்ட் ஹேண்டர்ஸ் டே-யாக அதாவது உலக இடது கை பழக்கமுடையோர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இன்றைய தினத்தை இடது கை வீரரான யுவராஜ் சிங் கொண்டாடும் விதமாக தனக்குப் பிடித்த அதே வேளையில் உலகில் சிறந்த 4 இடது கை மட்டையாளர்களின் பெயர்களையும் படத்தையும் வெளியிட்டுள்ளார்.
இந்த நாளை இந்த 4 இடது கை வீரர்களுக்கும் அவர் அர்ப்பணித்துள்ளார்.
முன்னாள் மே.இ.தீவுகள் பேட்டிங் மேதை பிரையன் லாரா, ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர், அதிரடி மன்னன் ஆடம் கில்கிறிஸ்ட், மேத்யூ ஹெய்டன், இவர்களோடு இவர் கொண்டாடும் இந்திய முன்னாள் கேப்டன், தற்போதைய பிசிசிஐ தலைவர் தாதா சவுரவ் கங்குலியையும் சேர்த்து படங்களுடன் வெளியிட்டுள்ளார் யுவராஜ் சிங்.
1976ம் ஆண்டு முதன் முதலில் உலக இடது கை பழக்கமுடையோர் தினத்தை உருவாக்கியவர் டீன் ஆர்.கேம்பல் ஆவார்.
இந்நிலையில் பல ஐபிஎல் அணிகளும் இடது கை வீரர்களைப் புகழ்ந்து கருத்த்துகளை வெளியிட்டுள்ளனர்.
ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு: “இடது கை வீரர்கள் இல்லாமல் கிரிக்கெட் என்பது நன்றாக இருக்காது”, என்று கூறியுள்ளது.
யுவராஜ் சிங்கின் பட்டியலில் விடுபட்ட மிகப்பெரிய இடது கை தொடக்க வீரர் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் அலிஸ்டர் குக் ஆவார், அவர் 161 டெஸ்ட் போட்டிகளில் 12,472 ரன்களைக் குவித்தவர்.
யுவராஜ் சிங் தன் ட்வீட்டில், ‘இடது கை வீரர்களின் பொன் பட்டியலில் உங்களுக்குப் பிடித்த வீரர் பெயரையும் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று தன் ரசிகர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.