அணித்தேர்வுக்குழு உன் பெயரைத் தேர்வுக்கு பரிசீலிக்கவில்லை: யுவராஜ் சிங்கிடம் கூறிய தோனி

அணித்தேர்வுக்குழு உன் பெயரைத் தேர்வுக்கு பரிசீலிக்கவில்லை: யுவராஜ் சிங்கிடம் கூறிய தோனி
Updated on
1 min read

இந்திய அணியின் ஸ்டார் பிளேயர்களுள் ஒருவர் யுவராஜ் சிங், 2007 டி20 உலகக்கோப்பை, 2011 உலகக்கோப்பைகளில் இவர் நட்சத்திரமாக உருவெடுத்தாலும் அதற்கு முன்பாக 1998 கென்யா சாம்பியன்ஸ் ட்ராபியில் அறிமுகத் தொடரிலேயே தடம் பதித்தார், அதன் பிறகு ஏகப்பட்ட போட்டிகளை வென்று கொடுத்துள்ளார்.

இவருக்கு ஒரு நியாயமான, மரியாதைக்குரிய பிரியாவிடை அளிக்கப்படவில்லை என்பது ரசிகர்களிடையே பெரிய வருத்தம் தரும் விஷயமாகும்.

இந்நிலையில் 2019-ல் இவர் ஓய்வு அறிவித்தார், அதன் பிறகு தைரியமாக சில கருத்துகளை அவர் கூறிவருகிறார்.

இந்நிலையில் தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த யுவராஜ் சிங் கூறியதாவது:

நான் மீண்டும் கிரிக்கெட்டுக்கு வந்த போது விராட் கோலி எனக்கு ஆதரவு அளித்தார், அவர் இல்லையெனில் நான் மீண்டும் வந்திருக்கவே முடியாது.

ஆனால் தோனிதான் 2019-ல் எனக்கு உலகக்கோப்பை சமயத்தில் தெளிவான சித்திரத்தை அளித்தார். அதாவது 2019 உலகக்கோப்பை திட்டங்களில் யுவராஜ் நீ இல்லை, தேர்வுக்குழுவினர் உன் பெயரை பரிசீலிக்கவில்லை என்ற உண்மை நிலவரத்தை எனக்கு தெரிவித்தவர் தோனிதான்.

2011 உலகக்கோப்பை வரை தோனி என்னிடம் அடிக்கடி கூறுவார், நீதான் என் மெயின் பிளேயர் என்று. புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த போது அணியின் அமைப்பே மாறிவிட்டிருந்தது.

என்றார் யுவராஜ் சிங்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in