

2007 உலகக்கோப்பையின் முத்தாய்ப்பான தருணம் ஒன்று உண்டென்றால் அது இங்கிலாந்து பவுலர் ஸ்டூவர்ட் பிராடின் ஒரே ஓவரில் 6 சிக்கர்களை விளாசி பலரையும் திகைக்க வைத்தார்.
கேரி சோபர்ஸ், ரவிசாஸ்திரி, ஹெர்ஷல் கிப்ஸ் ஆகியோருக்கு அடுத்த படியாக ஒரே ஓவரில் 6 சிக்சர்களை விளாசினார் யுவராஜ் சிங். உலகக்கோப்பையில் அதுவும் பிரமாதமான பவுலர் பிராடை ஒன்று இரண்டு சிக்சர்கள் அடிப்பதே கடினம், ஆனால் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை அடிப்பது என்பது கனவில் கூட நடக்க முடியாததாகும், அதைச் சாதித்தார் யுவராஜ் சிங்.
அந்தப் போட்டியில் 12 பந்துகளில் அரைசதம் அடித்து இன்னமும் கூட டி20 உலக சாதனையை வைத்துள்ளார் யுவராஜ் சிங். அன்று ஆண்ட்ரூ பிளிண்டாஃப் யுவராஜ் சிங்கை ஏதோ வார்த்தைகளால் சீண்ட பொங்கி எழுந்தார் யுவராஜ் சிங்.
அந்த 6 சிக்சர்கள் பற்றி குறிப்பிட்ட யுவராஜ் சிங், “ஆஸ்திரேலிய பயிற்சியாளர் அப்போது என்னிடம் வந்து என் பேட்டில் பைபர் உள்ளதா என்றார். அது சட்ட பூர்வமானதா? ஆட்ட நடுவருக்குத் தெரியுமா? என்றார். அதனால் நான் அவரிடம் நீங்களே செக் செய்து கொள்ளுங்கள் என்றேன்.
ஏன் ஆடம் கில்கிறிஸ்ட் பேட்டுகளை யார் தயாரிக்கிறார்கள் என்றார், ஆட்ட நடுவரும் என் பேட்டுகளை செக் செய்தார்.
ஆனால் உள்ளபடியே எனக்கு அந்த பேட் சிறப்பான பேட், அதே போல் 2011 உலகக்கோப்பை பேட்டும் எனக்கு சிறப்பானது. அது போன்ற பேட்டில் நான் ஆடியதில்லை.
தாதா ( கங்குலி) எனக்குப் பிடித்த கேப்டன் அவர் எனக்கு வலுவான ஆதரவளித்தார். இளம் வீரர்களின் திறமையை அவர் வளர்த்தெடுத்தார்” என்றார் யுவராஜ் சிங்.