

2011 உலகக்கோப்பையில் யூசுப் பத்தான், தான், ரெய்னா இவர்களில் யாரைத் தேர்வு செய்வது என்பதில் தோனி எப்போதும் ரெய்னாவுக்கு பக்கபலமாகவே திகழ்வார் என்று அந்த உலகக்கோப்பை நாயகன் யுவராஜ் சிங் தெரிவித்தார்.
ஸ்போர்ட்ஸ் டாக் என்பதில் யுவராஜ் சிங் தெரிவிக்கும் போது, “சுரேஷ் ரெய்னாவுக்கு அப்போது பெரிய ஆதரவு இருந்தது, காரணம் தோனி அவரை எப்போதும் தாங்கிப் ப்பிடிப்பார். ஒவ்வொரு கேப்டனுக்கும் பிடித்த வீரர் என்று யாராவது இருப்பார்கள், 2011 உலகக்கோப்பையின் போது தோனிக்கு ரெய்னாதான்.
யூசுப் பத்தானும் அப்போது பிரமாதமாக ஆடி வந்தார். நானும் நன்றாக ஆடினேன், விக்கெட்டுளை கைப்பற்றினேன். அப்போது இடது கை ஸ்பின்னர் அணியில் இல்லை நான் விக்கெட்டுகளைக் கைப்பற்றி வந்தேன், அதனால் வேறு வழியில்லை” என்று தெரிவித்தார்.
யூசுப் பத்தா நன்றாக ஆடிய போதிலும் அவர் அநியாயமாக உலகக்கோப்பையில் சில போட்டிகளிலும் அதன் பிறகும் அணியிலிருந்து நீக்கப்பட்டார். அது அவர் கிரிகெட் வாழ்க்கையையே சூனியமாக்கி விட்டது, இதனை பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் ஒரு முறைக் குறிப்பிட்டார்.
கிரிக்கெட்டில் திறமைகுத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டுமே தவிர தனக்கு இவரைப் பிடிக்கும் இவரைப் பிடிக்காது என்பது சொந்த ஆசாபாசங்களின் மூலம் சாதகம் செய்வதையே குறிக்கும்.
தோனி பற்றி யுவராஜ் சிங் இப்படிக் கூறுவது முதல் முறையல்ல, யுவராஜ் சிங் மட்டுமே இப்படி தோனியைப் பற்றி கூறுவதில்லை கம்பீர், சேவாக் உள்ளிட்ட வீரர்களும் தோனியின் இத்தகைய போக்குகளை அம்பலப்படுத்தியுள்ளனர்.